அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை அதிகாரி நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் தலைமை அலுவலகமான வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
ரப்பி ஃப்ரீமேன்-குர்ஸ்பேன் என்ற அந்த திருநங்கை, வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லெஸ்பியன், கே உள்ளிட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஓபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரப்பி ஃப்ரீட்மேன் நாட்டின் திருநங்கை சம உரிமை மையத்தின் பாலிசி அட்வைசர் பணியில் இருந்தார்.
இதனிடையே, திருநங்கைகளை ராணுவத்தில் சேர்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை ஆய்ந்துவருகிறது.


Click it and Unblock the Notifications
