வெள்ளை மாளிகை அருகே மர்ம பொருள்.. அமெரிக்க அதிபர் மாளிகை திடீர் மூடல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் மர்ம பை ஒன்று இருப்பதை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். இதையெடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம பை ஒன்று இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

வெடிகுண்டாக இருக்கலாம் என்பதால் அதிபர் மாளிகையின் வடக்கு பூங்கா மூடப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகை கதவுகளும் மூடப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்கா ரகசிய போலீஸ் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை சற்று தொலைவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதன்பின்னர் அந்த மர்மமான பை அகற்றப்பட்டதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. மர்ம பை குறித்து வெள்ளை மாளிகை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications