"டிரம்பின் எதிரி + பொருளாதார மேதை".. கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி யார் தெரியுமா? பின்னணி
ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த இடைக்கால பிரதமராக இருக்கும் மார்க் கார்னி மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்நிலையில் தான் மார்க் கார்னி யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வந்தார். இங்கு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் என்பது நடக்கும். அதன்படி கடந்த 2015, 2019 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சி சார்பில் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது.

ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா உடனான மோதல் என்பது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து வேறு வழியின்றி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கனடா நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. கனடாவை பொறுத்தவரை லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் இடையே தான் போட்டி இருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிர்ரி பொய்லிரி என்பவரும், லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
லிபரல் கட்சி வெற்றி
கனடாவில் மொத்தம் 343 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஓட்டு எண்ணிக்கையில் லிபரல் கட்சி தொடக்கம் முதலே முன்னிலை வகித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் லிபரல் கட்சி 168 தொகுதிகளில் வென்றது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 144 இடங்களை கைப்பற்றியது. Blck Quebecois கட்சி 23 தொகுதிகளிலும், ஜம்மித் சிங்கின் என்டிபி எனும் நியூ டெமாக்கிரட்டிக் கட்சி 7 இடங்களிலும், கிரீன் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இருப்பினும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி 168 இடங்களை மட்டும் கைப்பற்றியது. 4 இடங்கள் குறைவாக உள்ளது.
பிரதமராகும் மார்க் கார்னி
இதனால் கனடாவின் இடைக்கால பிரதமராக உள்ள லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் தனியாகவும், பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிற கட்சிகளின் ஆதரவிலும் ஆட்சியை பிடிக்க உள்ளார். இந்நிலையில தான் கனடாவின் புதிய பிரதமர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் இந்த மார்க் கார்னி?
அதன்படி கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகும் மார்க் கார்னிக்கு இப்போது 60 வயது ஆகிறது. இவருக்கு 4 குழந்தைகள். இவர் கனடாவின் போர்ட் ஸ்மித்தில் உள்ள ஆர்க்டிக் பிரதேச பகுதியில் பிறந்தார். அதன்பிறகு எட்மான்டன் நகரில் வளர்ந்தார். சிறுவயதிலேயே ஹாக்கி போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். பொருளாதார மேதையாக உயர்ந்தார்.
பேங்க் ஆஃப் கனடா மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகிய வங்கிகளில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2008 ல் கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அப்போது பேங்க் ஆஃப் கனடாவின் ஆளுநராக பொறுப்பெற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து கனடாவை மீட்டார். இவர் பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும், முதலீடு திட்டங்களை வகுப்பதிலும் வல்லவர்.
டிரம்புக்கு எதிரி
கனடா தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பில் சிக்கி உள்ளது. இதற்கிடையே தான் அவர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது தேர்தலில் களமிறங்கி பிரதமராகவும் தேர்வாகி உள்ளார். இவருக்கு லிபரல் கட்சியில் அதிக ஆதரவு உள்ளது. பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டபோது அவருக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். அதாவது 86 சதவீத ஓட்டுகளை பெற்று முன்னிலை பெற்ற மார்க் கார்னி இப்போது அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் இவர் டொனல்ட் டிரம்பின் எதிரியாக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா, கனடா அண்டை நாடுகளாக உள்ளன. டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் கனடாவுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். இதனை மார்க் கார்னி கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைக்க டிரம்ப் விரும்பினார். அதற்கு உடன்பட மாட்டோம் என்று உறுதியாக கூறினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா மக்களை வஞ்சிக்கிறது. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தார். இப்படி டொனால்ட் டிரம்புக்கு எதிராக பேசி வரும் மார்க் கார்னி தற்போது பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இருப்பினும் அவர் பொருளாதார மேதை என்பதால் அமெரிக்காவை சமாளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு கனடா மக்களிடம் உள்ளது. இதனை அவர் கையாளுவதை வைத்து தான் அவரின் செல்வாக்கு என்பது கனடாவில் அதிகரிக்கும். இது உண்மையில் மார்க் கார்னிக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட இந்த சவாலை மார்க் கார்னி சமாளிப்பார் என்று கனடா மக்களும், அவரது லிபரல் கட்சி தலைவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
பிளஸ் பாயிண்ட்டான ட்ரூடோ ராஜினாமா
கனடாவை பொறுத்தவரை லிபரல் கட்சிக்கு எதிராக மக்கள் இருந்தனர். ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ முன்கூட்டியே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மக்கள் ஓரளவு சமாதானம் அடைந்தனர். அதோடு அடுத்த பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி நிறுத்தப்பட்டதை கன்னட மக்கள் வரவேற்றனர். இதனால் மீண்டும் லிபரல் கட்சிக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டை விட லிபரல் கட்சிக்கு கூடுதல் இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2015 தேர்தலில் லிபரல் கட்சி 150 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 119 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த முறை இருக்கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications