பேஜர் அட்டாக்கால் அலறிய ஹிஸ்புல்லா.. பின்னணியில் இருக்கும் நிர்வாண ஓவியத்தின் காதலி? யார் இந்த பெண்?
பெய்ரூட்: இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில பெண் ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது? அந்த பெண் யார்? அவருக்கும் பேஜர் தாக்குதலுக்கும் எப்படி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல், லெபனான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. காசா மீதான போருக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்துகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு என்பது ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை அடுத்தடுத்து வெடித்தன. பேஜர், வாக்கி டாக்கியில் பிஇடிஎன் எனும் வெடிப்பொருட்களை வைத்து இஸ்ரேல் உளவுத்துறை ‛மொசாட்' வெடிக்க வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.
இதில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 32 பேர் வரை பலியாகி உள்ளனர். சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக பேஜர் தாக்குதலை மட்டும் எடுத்து கொண்டால் 12 பேர் பலியான நிலையில் 2,700 பேர் காயமடைந்தனர். மொத்தம் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததால் தற்போது ஹிஸ்புல்லா நிலைக்குலைந்து போய் உள்ளது. இந்த பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் திட்டமிட்டு நடத்தியதாக லெபனான் கூறி வருகிறது.
இதற்கிடையே தான் பேஜர் தாக்குதலின் பின்னணி பற்றி தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த பேஜர் தாக்குதலின் பின்னணியில் பெண் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பெயர் கிறிஸ்டியானா பார்சோனி ஆர்சிடியாகோனா. இவர் துகள்களை ஆய்வு செய்யும் இயற்பியல் படிப்பில் பிஎச்டி பிடித்துள்ளார். இவருக்கு மொத்தம் 7 மொழிகள் தெரியும். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டில் இருக்கிறார். இவர் ஓவியங்கள் வரைவதில் வல்லவர். இவர் நிர்வாண ஓவியங்களை வரைவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மேலும் மனிதாபிமான அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள நாடுகளில் உதவிகளை செய்து வருகிறார்.
இப்படி இருக்கும் சூழலில் இவரது பெயர் எப்படி பேஜர் தாக்குதலில் தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு கிறிஸ்டியானா பார்சோனியின் இன்னொரு பக்கத்தை நாம் பார்க்க வேண்டும். அதாவது ஹிஸ்புல்லாவுக்கு தைவான் நாட்டின் தைபே நகரில் செயல்படும் பேஜர் கோல்ட் அப்பேலோ நிறுவனத்தின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் அதுபற்றி விளக்கம் அளித்தது.
அப்போது கோல்ட் அப்போலோ நிறுவனம், ‛‛வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள் எங்களின் பிராண்ட் பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அதனை நாங்கள் தயாரிக்கவில்லை. எங்களின் பெயரை பயன்படுத்தி சில நிறுவனங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளோம். எங்களின் லைசென்ஸை பயன்படுத்தி ஹங்கேரி நாட்டில் செயல்படும் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் தான் இந்த பேஜர்களை தயாரித்து வழங்கி உள்ளது'' என்று கூறியது. கோல்ட் அப்போலோ நிறுவனம் கூறிய பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் உரிமையாளராகவும், தலைமை செயல் அதிகாரியுமாகவும் இருப்பவர் தான் இந்த கிறிஸ்டியானா பார்சோனி. இவருக்கு இப்போது 49 வயது ஆகிறது.
இதுபற்றி கிறிஸ்டினா பார்சோனி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் என்பிசி நிறுவனத்திடம், ‛‛வெடித்த பேஜர்களை நாங்கள் உருவாக்கவில்லை. நாங்கள் ஒரு இடைத்தரகு நிறுவனமாகும். தற்போது பரபரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த பேஜர் வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை'' என்று கூறியுள்ளார். இதுபற்றி ஹங்கேரி நாட்டின் அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛ஹங்கேரியில் பிஏசி கன்சல்டிங் என்ற பெயரில் நிறுவனம் எதுவும் செயல்படவில்லை. இந்த நிறுவனத்தின் சார்பில் ஹங்கேரியில் இருந்து எந்த ஏற்றுமதியும் செய்யவில்லை'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் இந்த கிறிஸ்டியானோ பார்சோனி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு அவரது அடுக்குமாடி குடியிருப்பு மூடியே உள்ளது. அவரை இ-மெயில், தொலைபேசி மூலம் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றாலும் முடியவில்லை. இதானல் கிறிஸ்டியானோ பார்சோனி எங்கு இருக்கிறார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே இருக்கிறது.
இதற்கிடையே தான் இந்த பேஜர் அட்டாக்கில் முன்பு வெளியான 2 விஷயங்களை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது கிறிஸ்டியானோ பார்சோனி உரிமையாளராக இருக்கும் பிஏசி கன்சல்டன்ட் நிறுவனம் தான் இஸ்ரேலின் ‛மொசாட்' உளவுத்துறை மூலம் தொடங்கப்பட்ட Shell நிறுவனம் என கூறப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் நிறுவனங்களை
இருப்பினும் தற்போது வரை Shell நிறுவனம் என அழைப்பார்கள்.
கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது, பயங்கரவாதத்துக்கு உதவி செய்வது, திட்டமிட்ட தாக்குதல் உள்ளிட்டவற்றுக்காக Shell நிறுவனங்கள் தொடங்கப்படும். இந்த நிறுவனங்கள் பணியாளர்களை வேலைக்கு வைக்காமல் எந்த உற்பத்தியையும் செய்யாது. மாறாக பிற நிறுவனங்களில் இருந்து வரும் பணப்பரிமாற்றம், பொருள் பரிமாற்றத்தை மட்டுமே இந்த நிறுவனங்கள் செய்து வரும். இது முதல் விஷயமாகும்.
2வது விஷயம் என்னவென்றால் கிறிஸ்டியானா பார்சோனியின் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் சார்பில் பல்கேரியா நாட்டின்
பல்கேரியா தலைநகர் சோபியாவில் செயல்பட்டு வரும் நார்த்தா குளோபல் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கேரளாவில் பிறந்த ரின்சன் ஜோஸ் என கூறப்படுகிறது. இவர் நார்வே குடியுரிமை பெற்று பல்கேரியாவில் நார்த்தா குளோபல் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் தற்போது எங்கியிருக்கிறார்? என்பது மர்மமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விஷயத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications