10 ஆண்டுகள் அரசியலில் ஓய்வு.. ஜெர்மனி பிரதமர் கனவை எட்டிப் பிடித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்! யார் இவர்?
பெர்லின்: ஜெர்மனி நாட்டின் புதிய பிரதமராகிறார் ஃப்ரெட்ரிக் மெஸ். 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வான மெர்ஸ், இடையே 10 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த 2021ல் மீண்டும் அரசியல் களம் கண்டு தற்போது ஜெர்மனியின் பிரதமர் ஆகியுள்ளார்.
ஜெர்மனி நாட்டில் சோஷியல் ஜனநாயக கட்சியின் தலைவர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி அமைச்சரை பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். அதனால் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ம்பிக்கை வாக்கெடுப்பில் ஒலாப் ஸ்கால்ஸ் பெரும்பான்மையை இழந்து தோல்வியைத் தழுவினார்.

அதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். ஜெர்மனி நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே பிப்ரவரி 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் இடதுசாரி சிந்தனைக் கட்சியான சோஷியல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஃபிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று (மே 6) நடைபெற்றது. 630 உறுப்பினர்களைக் கொண்ட ஜெர்மனி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற 316 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்தநிலையில், முதல் சுற்று வாக்கெடுப்பில் மெர்ஸால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
இதையடுத்து இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஃப்ரெட்ரிக் மெஸ் 325 வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து இன்றே ஜெர்மன் பிரதமராக ப்ரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்கிறார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்?
ஜெர்மனியின் புதிய பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்தவர். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் சாவர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர். 1972-ல் சிடியு கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு சட்டம் பயின்றார். 1981-ல் சார்லெட் மெர்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சார்லெட் மெர்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மெர்ஸ், விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் பெற்றவர். தன்னுடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தில் அவ்வப்போது பறப்பதில் ஆர்வம் கொண்டவர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு 1989ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஃப்ரெட்ரிக் மெர்ஸ். 1994-லும் ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். கிறிஸ்வத ஜனநாயக கட்சியில் இருந்த போதிலும் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இவரை ஓரம்கட்டி வைத்திருந்தார்.
னவே பின்னர் தமது வணிகத்தில் தீவிரம் காட்டி வந்த மெர்ஸ் தம்முடைய பிரதமர் ஆகும் கனவை தொடர்ந்து வந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் நுழைந்து, அடுத்த ஆண்டே கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இப்போது அவரது பிரதமர் கனவு நனவாகி உள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications