அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? சீன ஜோசிய குரங்கு கணிப்பு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற போவது என சீன ஜோசிய குரங்கு கணித்துள்ளது.
சீனா: சீனாவின் புகழ்பெற்ற ஜோசிய குரங்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என ஆருடம் கூறியுள்ளது.
சீனாவில் உள்ள ஜீடா எனும் குரங்கு தீர்க்க தரிசனத்தின் அரசன் என அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கு ஏற்றவாறே பல்வேறு உலக நிகழ்வுகளை தனது ஞான திருஷ்டியால் முன்கூட்டிய கணித்து வெற்றியும் பெற்றுள்ளது இந்த குரங்கு.
ஐரோப்பிய கால்பந்து தொடரில் போர்ச்சுகல்தான் வெற்றி பெறும் என முன்கூட்டியே கணித்ததால் பிரபலமடைந்த இந்த குரங்குக்கு சீனா மட்டுமின்றி உலகளவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இந்த குரங்கு ஜோசியம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கணிப்பதற்காக பிரத்யேக மேடை அமைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதன் ஒரு புறத்தில் ட்ரம்பின் உருவபொம்மையையும் மற்றொருபுறம் ஹிலாரியின் உருவ பொம்மையையும் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜோசியம் கூறுவதற்காக அழைத்துவரப்பட்ட குரங்கு மேடையில் ஏறியது. பின்னர் ஒரு கணம் கூட யோசிக்காமல் ட்ரம்பின் பொம்மையை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தேர்வு செய்தது.
குரங்கின் கணிப்புப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர போவது ட்ரம்ப்..
குரங்கின் கணிப்பு பலிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications