Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே மிகவும் பணக்கார நடிகை.. ஒரு படம் கூட ஓடல.. ஆனாலும் வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்கார நடிகைக்கு 8-பில்லியன் டாலர் சொத்து உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 67 ஆயிரத்து 164 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இவ்வளவு சொத்து சம்பாதித்துள்ள நடிகை இதுவரை ஒரு வெற்றிப் படங்களில் கூட நடித்தது இல்லை.. உலகின் புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்களான செலினா கோம்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட், ரிஹானா ஆகியோரை விட பணக்காரர். அவர் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இதில் கவனிக்க வேண்டிய மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப் பெரிய பணக்கார நடிகையான அவர், ஒரு வெற்றிப்படத்தில் கூட நடிக்கவில்லை.. அதேபோல் உலகமே போற்றும் புகழ் பெற்ற நடிகையும் இல்லை. திரைத்துறையில் வெற்றிகரமான வாழ்க்கை அவருக்கு அமையவில்லை..ஆனால் உலகில் உள்ள எந்த ஒரு சினிமா பிரபலத்தையும் விட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.

word actress

இந்த உலகத்தில் மிகவும் பணக்கார நடிகர் என்றால், அது டைலர் பெர்ரி தான். நாடக ஆசிரியராக இருந்து நடிகராக மாறியவர் ஆவார். அவர் தனக்கென்று சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருக்கிறார். இதன் மூலமே அதிகமான பணம் சம்பாதித்துள்ளார் . அந்த ஸ்டுடியோ தான் அவரை 1.4 பில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளர் ஆக்கியுள்ளது. அதாவது அவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில், 11 ஆயிரத்து 754 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளார். ஆனால் இவரை விடவும் பணக்காரராக அந்த நடிகை இருக்கிறார். உண்மையில் டைல் பெர்ரியைவிடவும் ஐந்து மடங்கு பணக்காரர் என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் பணக்கார நடிகை எவ்வளவு பணக்காரர் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ள முடியும். ஆனால் இவர் பெயரை சொன்ன உடன் அடையாளம் தெரியும் அளவுக்கு தெரிந்த நடிகையும் அல்ல.. வாருங்கள் யார் என்று பார்ப்போம்..

உலகின் பணக்கார நடிகை: ஜாமி கெர்ட்ஸ், இவரது பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்ற நடிகை அல்ல.. ஆனால் ஜாமின கெர்டஸ் அமெரிக்க நடிகையாக இருந்து தொழில்முனைவோராக மாறியவர் ஆவார். உலகின் பணக்கார சினிமா நடிகர் (நடிகர் நடிகையை இப்படித்தான் குறிப்பிடுவார்கள்) இவர் தான். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, நடிகை ஜாமி கெர்ட்ஸ் சொத்துமதிப்பு 8 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 67 ஆயிரத்து 164 கோடி ரூபாய் சொத்து ஆகும்) ஆகும்.

ஜாமி கெர்ட்ஸ் சொத்து மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், உலகின் எந்த பிரபல நடிகையிடமும் இவ்வளவு சொத்து இல்லை.. உண்மையில், இந்த பட்டியலில் உள்ள அடுத்த மூன்று நடிகைகளை விட ஜாமி கெர்ட்ஸிடம் தான் அதிக பணம் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தான் டெய்லர் ஸ்விஃப்ட் வருகிறார் ($1.6 பில்லியன்), ரிஹானா ($1.4 பில்லியன்), மற்றும் செலினா கோம்ஸ் ($1.3 பில்லியன்) அடுத்தடுத்த இடத்தில் வருகிறார். பட்டியலில் பில்லியனர் அல்லாத முதல் ஐந்து இடங்களில் தான் மடோனா வருகிறார்

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் ஐந்து பணக்கார நடிகைகளும் நடிப்பைத் தவிர வேறு ஏதோவொன்றில் தங்கள் செல்வத்தை சம்பாதித்துள்ளனர். ஜாமி கெர்ட்ஸை பொறுத்தவரை பிசினஸில் அதிகமாக முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார். ஆனால் மற்ற நான்கு நடிகைகளும் இசை நிகழ்ச்சி நடத்துவது அல்லது அழகு பொருட்கள் பிராண்டுகள் விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கிறார்கள். இந்த பட்டியலில் ரீஸ் விதர்ஸ்பூன் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த பணக்காரர் பட்டியலின்படி 550 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியர் ஜூஹி சாவ்லா தான்

ஜாமி கெர்ட்ஸ் யார்?: 1965 இல் சிகாகோவில் பிறந்த ஜாமி கெர்ட்ஸ் 1980 களில் தனக்கான வாழ்க்கை எது என்று தேடத்தொடங்கியவர். நடிப்பு தான் வாழ்க்கை என்று நினைத்து வாழ்க்கையைத் தொடங்கினார். 1981 ஆம் ஆண்டு with Endless Love என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 1987 ஆம் ஆண்டில், ராபர்ட் டவுனி ஜூனியருக்கு ஜோடியாக லெஸ் டான் ஜீரோ படத்தில் நடித்தார். அதே ஆண்டு, தி லாஸ்ட் பாய்ஸ் இல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

word actress

ஒரு முன்னணி நடிகையாக மாறி, கெர்ட்ஸ் ஒருபோதும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை ருசித்தவர் இல்லை.. அவர் நடித்த எந்த படமும் வெற்றிப்படம் இல்லை.. இதனால் ஒரு கட்டத்தில் துணை வேடங்களில் நடிக்க தொடங்கினார். 90 களில் ட்விஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும், அல்லி மெக்பீல் போன்ற சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தார். ட்விஸ்டரில் நடித்தற்காக மோசமான துணை நடிகை விருதுக்கு ராசிஸ்ஸ் என்ற நிறுவனம் பரிந்துரை செய்தது. ஜெமி கெர்ட்ஸ் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான ஐ வாண்ட் யூ பேக் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.அதுதான் அவர் சினிமாவில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.

ஜாமி கெர்ட்ஸ் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார்?: ஹாலிவுட் நடிகையான ஜாமி கெர்ட்ஸின் நடிப்பு வாழ்க்கை ஒருபோதும் பணம் குவிக்கவில்லை என்றாலும், அவர் எப்படி உலகின் பணக்கார நடிகையானார் என்பதற்கான பதில் இருக்கிறது. 1989ம் ஆண்டு, ஜாமி கெர்ட்ஸ் அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர் டோனி ரெஸ்லரை மணந்தார். இருவரும் இணைந்து பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்துள்ளனர். மேஜர் லீக் பேஸ்பாலின் மில்வாக்கி ப்ரூவர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும், அட்லாண்டா ஹாக்ஸ் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (NBA) இணை உரிமையாளர்களாகவும் உள்ளனர். இப்படி பல்வேறு தொழில்களில் செய்த முதலீடு தான் ஜாமி கெர்ட்ஸை உலகின் பணக்கார நடிகையாக மாற்றி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+