தரதரவென இழுத்து சென்ற பாலஸ்தீன்.. இஸ்ரேலின் மாஸ்டர் மைண்ட் கைது! ஆடிப்போன உலகம் -யார் இந்த நிர்மோத்?
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனின் ஹமாஸ் படையினர், அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவத்தின் மாஸ்டர் மைண்டாக கருதப்படும் ராணுவ தளபதி நிர்மோத் அலோனியையே கைது செய்து இருக்கிறது. யார் இவர்? விரிவாக பார்ப்போம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன் நாட்டின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி தற்போது காசாவையும் மேற்கு கரை பகுதியை கைப்பற்ற அந்நாட்டு மீது தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியை இஸ்ரேல் இழிவுபடுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பின் படை நேற்று இஸ்ரேல் மீது 5000 க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியது.

அத்துடன், எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள், தளபதிகளை கைது செய்து தங்கள் பிடியில் வைத்து இருக்கிறது. இப்படி பாலஸ்தீனிடம் சிக்கியவர்தான் நிர்மோத் அலோனி. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை காசாவின் கட்டுப்பாட்டு பிரிவு பிரிகேடியராக இருந்த இவர், தற்போது இஸ்ரேலின் தலைசிறந்த வீரர்களை கொண்ட ISF எனப்படும் இஸ்ரேல் சிறப்பு படையின் "Depth Crops" எனப்படும்.., எதிரிகளை ஆழ ஊடுறுவும் படை அணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேலுக்கு எதிராக திட்டம் தீட்டும் நபர்கள், அமைப்புகளை கண்டறிந்து செல்லும் உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று அழைக்கப்படும் மொசாத்திடம் இருந்து தகவல்களை பெற்று, அவர்களை கைது செய்வது, கொல்வது போன்றவைதான் இவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் வேலை. இதுவரை பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல் பலவற்றை இவரே வழி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் நிர்மோத் அலோனியை கைது செய்து பாலஸ்தீனுக்கு அழைத்து வந்து உள்ளனர்.
தங்களின் பாதுகாப்பு கவசம் என யாரை இஸ்ரேல் நினைத்து நம்பியதோ, அந்த பிரிவின் தலைவரையே ஹமாஸ் தூக்கியது அந்நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது. நிர்மோத் அலோனியிடம் இஸ்ரேலின் ரகசிய நடவடிக்கைகள், திட்டங்கள், ராணுவ ரகசியங்களை ஹமாஸ் மிரட்டி கேட்டுப் பெறும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிர்மோதை தங்களின் பொக்கிஷமாக கருதுவதால் அவரை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, அந்நாட்டை ஹமாஸ் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications