80,000 ஆபாச படங்கள்.. ரூ.100 கோடி மிரட்டல்! புத்த துறவிகளை குறிவைத்த இளம்பெண்.. யார் இந்த விலாவன்?

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் புத்த மடங்களையும் அதிர வைக்கும் ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. புத்தத் துறவிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு மாபெரும் பாலியல் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புத்தத் துறவிகளுடன் நெருங்கிப் பழகி, பின்னர் பணம் கேட்டு மிரட்டியதாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புத்த மத துறவிகள் அனைவரும் தங்கள் இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டு பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். புத்த மதத்திற்காகவே இவர்கள் அனைத்துச் சுகங்களையும் துறந்து இருப்பார்கள். இந்தப் புத்த மத துறவிகளைக் குறிவைத்து தாய்லாந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய மோசடி அரங்கேறியுள்ளது. அது தொடர்பான தகவல் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Who is Thai Woman Wilawan Emsawat Extorts Rs 100 Crore from Monks with 80 000 pics

புத்தத் துறவிகளுடன் நெருக்கம்

அதாவது தாய்லாந்து பெண் ஒருவர் புத்த மத துறவிகளுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார். பிறகு அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, அதை வைத்தே பிளாக்மெயில் செய்துள்ளார். இப்படியே அவர் ஏகப்பட்ட புத்தத் துறவிகளிடம் இருந்து பெரும் தொகையை மிரட்டி வாங்கியுள்ளார். துறவிகள் பிரம்மச்சரிய விரதத்தை மீறியது என்பதால் இந்தச் சம்பவம் தாய்லாந்தைத் தாண்டி உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது ஒன்பது மடாதிபதிகள் மற்றும் மூத்த துறவிகள் துறவற வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இளம்பெண் கைது

இந்த விவகாரத்தில் பாங்காக்கின் வடக்கே உள்ள நான்டாபுரியில் வைத்து விலாவன் எம்சாவத் என்ற 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பணம் பறித்தல், பணமோசடி மற்றும் திருட்டுப் பொருட்களைப் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்கொள்கிறார். "மிஸ் கோல்ஃப்" என்று அந்நாட்டு ஊடகங்கள் இவரைக் குறிப்பிடுகின்றன. இவர் குறைந்தது ஒன்பது துறவிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

விலாவன் செல்போனை தொலைப்பேசிகளைப் பறிமுதல் செய்த போலீசார் அதை ஆய்வு செய்தனர். அப்போது தான் பல புத்தத் துறவிகளுடன் அவர் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளதைக் கண்டறிந்தனர். மேலும், அவர் அதை வைத்து மிரட்டிப் பணம் பறித்தது தெரிய வந்தது. இதுபோல மிரட்டி வாங்கிய பணத்தை வைத்து அவர் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

மோசடி செய்தது எப்படி

சமூக வலைத்தளங்கள் மூலம் விலாவன் துறவிகளை அணுகி இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் தனது பேச்சின் மூலமாகவே மயக்கி இருக்கிறார். இந்த விலாவனுடன் உறவு வைத்திருந்ததைச் சில துறவிகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு துறவி விலாவனுடன் நீண்ட காலம் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். விலாவன் தனக்கு ஒரு காரை கூட பரிசாக அளித்ததாகவும் ஆனால் அவர் வேறொரு துறவியுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்தபோது பிரிந்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், அப்படிப் பிரிந்த பிறகு தன்னிடம் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதாக அந்தத் துறவி கூறியிருக்கிறார்.

80,000 ஆபாச வீடியோக்கள்

அவரது வீடு முழுக்க நடத்தப்பட்ட சோதனையில். துறவிகளை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வீடியோக்களை கண்டுபிடித்தனர். அவர் ஏராளமான புத்த மத துறவிகளுடன் அந்தரங்கமாக இருந்து அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதுபோன்ற 80,000க்கும் மேற்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

ரூ.102 கோடி மோசடி

இந்த வீடியோக்களை எல்லாம் வைத்து மிரட்டிக் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 385 மில்லியன் பாட் பெற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் இவர் துறவிகளிடம் இருந்து ரூ. 102 கோடியை மிரட்டி வாங்கியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி

கடந்த மாதம் பாங்காக்கில் மடாதிபதி ஒருவர் தன்னை ஒரு பெண் மிரட்டுவதாகச் சொல்லி துறவறத்தை விட்டு வெளியேறிய போதே போலீசார் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது வாட் த்ரி தோட்சாதெப் மடாலயத்தின் மடாதிபதி இந்தப் பெண்ணின் பிளாக்மெயிலுக்கு பயந்து திடீரென மாயமானார். அப்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்தது.

தாய்லாந்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அங்குச் சுமார் 200,000 துறவிகளும், 85,000 இளைய துறவிகளும் உள்ளனர். தாய்லாந்தில் புத்த மத துறவிகள் இதுபோன்ற வழக்குகளில் சிக்குவது முதல்முறை இல்லை. ஆனால், பெரும்பாலும் இளைய துறவிகளே இந்த சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பல மூத்த துறவிகள் மாட்டியுள்ளது விவாதமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+