சொகுசு மாளிகை, கார், ஜெட்! உலகின் பணக்கார அரசியல்வாதி சொத்து மதிப்பு ஜஸ்ட் 16 லட்சம் கோடி! யார் அவர்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உலகிலேயே மிகவும் பணக்கார அரசியல்வாதி என்றால் அது யார்.. அவரது சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே அரசியல்வாதி என்றாலே அவர்கள் சொத்து பல கோடி இருக்கும் என்ற பேச்சு இங்கே இருக்கிறது. அதற்கேற்ப தான் இங்கே பெரும்பாலான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

 Who is the richest politician in the world the answer will be surprise you

ஆனால், உலகில் பணக்கார அரசியல்வாதியான இவரது சொத்து மதிப்பைக் கேட்டால் உங்களுக்குத் தலை சுற்றிவிடும். அவர் யார் அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

யார் அவர்: அவர் யார் என்றால் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தான் அது.. ரஷ்ய அதிபர் தனது அதிகாரப்பூர்வமான ஆண்டு சம்பளம் $140,000 எனக் கூறினாலும், அவரது நிகர மதிப்பும் வாழ்க்கை முறையும் வேறு விதமான கதையைச் சொல்கிறது.

800 சதுர அடி அபார்ட்மெண்ட், ஒரு டிரெய்லர் மற்றும் மூன்று கார்கள் ஆகியவை தான் அவரது சொத்து என்பது அதிகாரப்பூர்வ தகவல்.. ஆனால், அவர் குறித்து வெளிவரும் தகவல்கள் வேறு விதமான கதையைச் சொல்கிறது. புதினின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.16 லட்சம் கோடி) இருக்கலாம் என்று பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த 1990களில் புதின் முதலில் அதிகாரத்திற்கு வந்த நிலையில், அப்போது முதலே இந்த தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

மர்மம்: இருப்பினும், புதின் சொத்து மதிப்பு துல்லியமாக எவ்வளவு என்பது இதுவரை புரியாத மர்மமாகவே இருக்கிறது. புதின் சொத்து எனக் கூறப்படும் சொத்துகளில் முக்கியமானது பிளாக் சீ மாளிகை, இதை அவர்கள் புதினின் கன்ட்ரி காட்டேஜ் என்று அழைப்பார்கள். அழகிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த மாளிகை கிரேக்க கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பளிங்கு நீச்சல் குளத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஒரு தியேட்டர், ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க், கேசினோ மற்றும் ஒரு இரவு விடுதியும் கூட இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மாளிகையின் உட்புறம் மட்டும் $500,000 (சுமார் 4.2 கோடி) டாலர் மதிப்புள்ளதாக இருக்கிறது. $54,000 மதிப்புள்ள ஒரு பார் டேபிள் மற்றும் $850 விலையில் இத்தாலிய டாய்லெட் பிரஷ்கள் மற்றும் $1,250 டாய்லெட் பேப்பர் ஹோல்டர்களை என்று எல்லாமே விலையுயர்ந்த பொருட்களே இதில் நிரம்பியுள்ளன. இந்த பிரமாண்ட மாளிகையைப் பராமரிக்க, 40 பேர் கொண்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். பராமரிப்பு செலவுக்காக மட்டும் $2 மில்லியன் செலவாவதாக கூறப்படுகிறது.

19 சொகுசு வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள்: அதிபர் புதினிடம் இருக்கும் ஆடம்பர பொருட்களை லிஸ்ட் போட்டால் அது கேட்டு உங்கள் தலை சுற்றிவிடும். அதிபர் புதினிடம் 19 சொகுசு வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. இவை தவிர $716 மில்லியன், அதாவது சுமார் ரூ.5,900 கோடி மதிப்பிலான "தி ஃப்ளையிங் கிரெம்ளின்" விமானமும் இவருக்குச் சொந்தமாக இருக்கிறது.

இவை தவிர மற்றொரு 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெஹரசாட் என்ற சொகுசு படகும் இவருக்குச் சொந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பல கோடி மதிப்பிலான ஆடம்பர கடிகாரங்களின் கலென்கஷனும் இருக்கிறது. அவரது கைகளில் கட்டியுள்ள ஆடம்பர வாட்ச்களின் மதிப்பை எடுத்தால் அவை மட்டுமே அவரது அதிகாரப்பூர்வ ஆண்டு சம்பளத்தை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+