உலகின் முதல் விந்தணு ரேஸை நடத்திய அமெரிக்கா! இறுதி நொடி வரை பரபரத்த போட்டி! வென்றது யார் தெரியுமா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரொம்வே வினோதமான ஒரு போட்டி நடந்துள்ளது. நாம் கனவிலும் யோசிக்காத வகையில் அங்கு விந்தணு ரேஸை நடத்தியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஹாலிவுட் பல்லேடியத்தில் நடந்த இந்த ரேஸை பலர் நேரில் பார்த்துள்ளனர். இது குறித்த தகவல் இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில், நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கா என்பது பல வினோதங்கள் நடக்கும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும். நாம் நினைத்துக் கூட யோசிக்காத பல சம்பவங்கள் கூட அமெரிக்காவில் அசால்டாக நடக்கும். அப்படிதான் இப்போது அதே அமெரிக்காவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதுதான் விந்தணு ரேஸ்.!

விந்தணு ரேஸ்
எது விந்தணு ரேஸா.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உண்மையாகவே விந்தணு ரேஸ் நடந்துள்ளது. உலகெங்கும் ஆண்களிடையே கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருகிறது.. ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ரேஸ் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மிகவும் இந்தப் போட்டி நடந்துள்ளது. இந்த வினோதமான ரேஸை 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர் எரிக் சூ என்பவர் கண்டுபிடித்துள்ளார். மேலும், இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து நிதியும் திரட்டியுள்ளார். இந்தப் போட்டியை நடத்த 1.5 மில்லியன் டாலர் நிதி கிடைத்த சூழலில் அதை வைத்தே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பல்லேடியத்தில் இந்த ரேஸை நடத்தியுள்ளார். இதை பார்க்கவும் கூட பெரிய கூட்டமே வந்துள்ளது.
எப்படி நடத்தப்பட்டது
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இந்த ரேஸில் இரு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதாவது இரு போட்டியாளர்களின் விந்தணுக்கள் பங்கேற்றது. அவர்களின் விந்தணுக்கள் போட்டிக்கு முன்கூட்டியே சேகரிக்கப்பட்டது. மேலும், இரண்டு மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய டிராக்கில் இந்த ரேஸ் நடத்தப்பட்டது. மேலும், பெண்ணின் உடல் உறுப்பு போலவே இந்த ரேஸ் டிராக் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் இரு போட்டியாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தணு ரேஸ் டிராக்கில் விடப்பட்டது.
நேரலை எப்படி
2 மில்லிமீட்டர் தான் ரேஸ் டிராக் என்றால் அதை எப்படி மக்கள் பார்த்தனர் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்த பிரச்சினையையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்த்துள்ளனர். அதாவது மைக்ரோஸ்கோப் வைத்து ரேஸ் டிராக்கை 100 முறை பெரிதாக்கி அதை வீடியோவாக எடுத்துள்ளனர். பிறகு அதை சாப்ட்வோரை வைத்து 3D அனிமேஷனாக மாற்றி அதை ஒளிபரப்பியுள்ளனர். யூடியூபிலும் இதை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்துள்ளனர்.
வென்றது யார்
இந்த போட்டியில் 20 வயதான டிரிஸ்டன் மில்கர் மற்றும் 19 வயதான ஆஷர் ப்ரோகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதில் 20 வயதான டிரிஸ்டன் மில்கர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாகப் போட்டியை நடத்திய எரிக் சூ கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களிடையே விந்தணு எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக நான் படித்தேன். இதே நிலை தொடர்ந்தால் வரும் பேரழிவு ஏற்படும். மனிதர்களே பிறக்க மாட்டார்கள். இதனால் பூமியே அழிந்துவிடும். அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ரேஸை நடத்தியுள்ளோம்" என்றார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications