அலறிட்டாங்க மேடம்.. பேசிட்டிருக்கும்போதே "பின்பக்கத்தை" தொட்டு தடவி.. அசரலையே சபலிஸ்ட்.. வீடியோ வேற
மாட்ரிட்: லைவ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள். என்ன நடந்தது?
சில மாதங்களுக்கு முன்பு, மும்பையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மும்பை கர் (Khar) பகுதியில் இருப்பதை யூடியூப்பில் லைவ் வீடியோ காண்பித்து கொண்டிருந்தார்.

அப்போது, சில இளைஞர்கள் பைக்கில் வந்தார்கள்.. வெளிநாட்டு பெண்ணை பார்த்ததுமே, அவரை மறித்து, தங்களுடன் பைக்கில் வருமாறு சொன்னார்கள்.. பிறகு, அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து சென்று வற்புறுத்தினார்கள்.. மேலும், இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மும்பை போலீஸ்: பிறகு, சுதாரித்து கொண்டு இளைஞர்களிடம் இருந்து தப்பி அவர் திரும்பி செல்ல முயன்றார்.. ஆனால், அந்த இளைஞர்கள், மறுபடியும் வந்து தொந்தரவு செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்கள்..
இதெல்லாம் அந்த லைவ் வீடியோவில் பதிவாகி, அதை காண்போருக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது. அந்த தென்கொரிய பெண், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடவும், அந்த விவகாரம் மேலும் பற்றிக்கொண்டு எரிந்தது. இதையடுத்து பெண்ணிடம் அத்துமீற முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர் என்றாலும், இந்தியாவின் மானம் தென்கொரியாவில் பறந்ததை தடுக்க முடியவில்லை.
சம்பவங்கள்: லைவ் வீடியோ எடுக்கும்போதே இப்படியான சம்பவங்கள் நடப்பது அதிகரித்துவிட்டது.. இதோ ஸ்பெயின் நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
ஸ்பெயின் நாட்டின், டிவி ஒன்றில் பணியாற்றி வருகிறார் ஈஷா.. இவர் பிரபலமான செய்தியாளரும்கூட.. சம்பவத்தன்று, நேரலை நிகழ்ச்சி ஒன்றில், சாலையின் ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.. அதாவது, ஸ்டூடியோவில் உட்கார்ந்திருந்த தொகுப்பாளர் கேள்விகளுக்கு, ஈஷா சாலை ஓரமாக நின்று சொல்லிக்கொண்டிருந்தார். கேமராவும் ஓடிக் கொண்டிருந்தது.
வீடியோ: அந்த நேரம்பார்த்து, சாலையில் நின்றுகொண்டிருந்த பெண் செய்தியாளரின் பின்பக்கமாக ஒரு நபர் வந்து கொண்டிருந்தார்.. லைவ் வீடியோவில் பெண் இருப்பது தெரிந்தும்கூட, அவரது பின்பக்கத்தை தட்டிவிட்டு சென்றார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரிப்போர்ட்டர் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒருநிமிடம் விழித்தார்.. லைவ் வீடியோ ஓடிக்கொண்டிருப்பதால், இது குறித்து எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை..
எதுவும் நடக்காதது போல, தன்னுடைய பேச்சை வீடியோவில் தொடர்ந்தார்.. ஆனால், டிவி ஸ்டுடியோவில் தொகுப்பாளர் இதை கவனித்துவிட்டார்.. பெண் ரிப்போர்ட்டரிடம், "இப்போ ஒருத்தர் உங்களை கடந்து போனாரே, அவர் உங்களை அநாகரிகமாக தொட்டாரா?" என்று லைவ் வீடியோவிலேயே கேட்டார்.. உடனே ரிப்போர்ட்டர் பெண்ணும், "ஆம்" என்று மழுப்பலாக பதிலளித்தார்.
கேமரா: உடனே தொகுப்பாளர், "அப்படின்னா, உங்களுக்கு அருகில் நிற்கும் அந்த நபரை பார்க்க வேண்டுமே.. அந்த முட்டாளை கேமிரா முன்பாக நிறுத்துங்கள், அவரை அடையாளப்படுத்துங்கள்' என்றார்..

உடனே ஈஷாவும், அந்த நபரின் அருகில் சென்று கேள்விகளை எழுப்பினார்.. இதை கொஞ்சமும் அந்த நபர் எதிர்பார்க்கவில்லை.. தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று மறுத்து பேசினார்.. பிறகு, கேமரா ஓடுவதை பார்த்ததும், கேமராவை பார்த்தபடியே சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால், செய்த தவறுக்கு சிறிதும் வெட்கப்படவில்லை.
அதிரடி கைது: கொஞ்ச நேரம் கழித்து, அதே நபர், மறுபடியும் ஈஷாவிடம் வந்து நின்றார்.. இதற்கு பிறகு, செய்தி சேனலில் இருந்த தொகுப்பாளர், போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க, அடுத்த சில நிமிடங்களில் அந்த நபரை மாட்ரிட் போலீஸார் கைது செய்து அள்ளிக்கொண்டு போனார்கள். இதெல்லாமே அந்த வீடியோவில் பதிவாகி, இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications