Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த கடைசி நொடி.. சிரித்த முகத்துடன் நெருப்பு குழிக்குள்.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கொண்டிருந்தார் 31 வயது ஹுவாங்.. அதுதான் அவருக்கு கடைசி நிமிடம் என்று தெரியாது.. நெருப்புக்குழி அவரை காவு வாங்கி கொண்டுவிட்டது.

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா.. இதற்கு முக்கியமான மொத்தம் 17,508 தீவுகளை இந்த நாடு கொண்டிருக்கிறது..

Who is this Pity Chinese woman and fell down into Indonesia Volcano due to Selfie Video

தீவுகள்: இங்கிருக்கும் பல தீவுகளே, மனதை மயக்கும் சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன.. இதில், எரிமலைகள் மட்டுமே 130 இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த இந்தோனேஷியாதான், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளின் தாயகமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. தீவுகளும், கடற்கரைகளும், மழைக்காடுகளும், எரிமலைகளும், பழங்கால கோவில்களும், உலகின் கடைக்கோடி மக்களின் மனதையும் கட்டிப்போட்டுவிடுவதை மறுக்க முடியாது.

அப்படித்தான், ஹுவாங் என்ற சீனப்பெண்ணும் இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.. கிழக்கு ஜாவா மாகாணத்தில் இஜென் எரிமலை சுற்றுலா பூங்கா மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா இடமாகும்.. இந்த இடத்திற்கு தன்னுடைய கணவனுடன் வந்துள்ளார் ஹுவாங்.. இந்த தம்பதிக்கு, அங்கிருந்த கைடு அனைத்து பகுதிகளையும் சுற்றிக்காட்டி கொண்டே வந்தார்..

Who is this Pity Chinese woman and fell down into Indonesia Volcano due to Selfie Video

தம்பதி: ஒவ்வொரு இடத்தையும் மலைத்துப்போய் பார்த்து கொண்டே வந்த ஹூவாங், இஜென் எரிமலைகளின் ஒவ்வொரு இடத்தையும் ஓடி ஓடி போட்டோக்களை எடுத்தார்.. இந்த இஜென் எரிமலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே, தம்பதி இருவரும் நீண்ட நேரம் காத்திருந்து அந்த காட்சியை வெகுவாக ரசித்துள்ளனர்..

பிறகு அங்கிருந்து 'புளூ பயர்' என்கிற நிகழ்வை வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக, எரிமலையின் உச்சிக்கு கிடுகிடுவென ஏறிச்சென்றார் ஹுவாங். அதாவது, எரிமலையின் சீற்ற நிகழ்வை நேரடியாக காணலாம்.. இதற்குதான் புளூ ஃபயர் என்பார்கள்.

Who is this Pity Chinese woman and fell down into Indonesia Volcano due to Selfie Video

சூரிய உதயம்: எரிமலை உச்சிக்கு ஏறிச்சென்று ஹூவாங் பார்த்தபோது, சுற்றியிருக்கும் மற்ற எரிமலைகள், சூரிய உதயத்தில் பிரகாசமாக அவரது கண்ணை பறித்தது.. எனவே, மொத்த எரிமலைகளையும், சூரிய உதயத்துடன் சேர்த்து வீடியோ எடுக்க ஆசைப்பட்டார் ஹூவாங்..

வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோதே, டக்கென கேமிராவை தன்பக்கம் திருப்பிக்கொண்டு "செல்பி"யில் இறங்கினார்.. அவ்வளவுதான், கால் தவறி அங்கிருந்த ஒரு எரிமலைக்குள் விழுந்துவிட்டார் ஹுவாங்... கிட்டத்தட்ட 75 மீட்டர் உயரத்தில் இருந்து நெருப்பு குழிக்குள் விழுந்து கருகி சாம்பலானார் ஹூவாங்.. ஒரே செகண்டில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது..

Who is this Pity Chinese woman and fell down into Indonesia Volcano due to Selfie Video

எச்சரிக்கை: ஆனால், ஹுவாங் எரிமலையின் உச்சிக்கு ஏறியபோது, அங்கிருந்த கைடு அவரை தடுத்துள்ளார்.. மேலே போகக்கூடாது, ஆபத்து என்று எச்சரித்திருக்கிறார்.. ஆனால், இயற்கையின் காதலில் விழுந்த ஹுவாங், யார் பேச்சையும் கேட்கவில்லை..

எரிமலைக்குள் ஹூவாங் விழுந்ததுமே, அங்கிருந்த ஒட்டுமொத்த பேரும் கதறி கூச்சலிட்டார்கள்.. மீட்பு படையினர் உடனடியாக எரிமலைக்குள் குதித்து, ஹுவாங்கை மீட்க முயன்றனர்.. ஆனால் 2 மணி நேரம் போராடியும், ஹூவாங்கின் கருகிய பிணம்தான் கிடைத்தது.. சுற்றுலா வந்த இடத்தில் கருகிய மனைவியின் சடலத்தை கண்டு, கணவரின் கதறல் காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது..

சமீபத்தில்தான், இதே இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ருயாங் என்ற எரிமலை வெடித்து சிதறியது... அப்போது, இந்த எரிமலையிலிருந்து பீறிட்ட தீக்குழம்புகள், இந்தோனேஷிய மூலைகளில் தெறித்து விழுந்தது.. அதனால், 6 கிலோ மீட்டருக்கு யாரும் இருக்க வேண்டாம் என்று அப்போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எந்த அளவுக்கு அழகை தருகிறதோ, அந்த அளவுக்கு பயங்கரத்தையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றன இந்த எரிமலைகள்.

Who is this Pity Chinese woman and fell down into Indonesia Volcano due to Selfie Video

விடாத மோகம்: இந்த செல்பி மோகம் என்று ஒழியுமோ தெரியவில்லை.. ஒரு காலத்தில் போட்டோ எடுத்தாலே, ஆயுள் குறையும் என்பார்கள்.. ஆனால், இப்போது, தனக்குத்தானே போட்டோவை எடுப்பது ஆயுளை முடித்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, அடிக்கடி செல்பி எடுப்பது மனநோயின் அறிகுறியாக மாறிவிட்டதாக டாக்டர்களே சொல்கிறார்கள்..

துணிச்சல், சாகசம் என்றெல்லாம் இதற்கு நமக்கு நாமே பெயரை வைத்துக்கொண்டாலும், இந்த உலகில் "உயிரைவிட" வேறு எதுவும் பெரிதாக இருக்க போவதில்லை.. அதேசமயம், மனித உயிர்களை பறிக்கும் ஒவ்வொரு செல்பி வீடியோக்களின், கடைசி நிமிட காட்சிகளிலிருந்தும் நம்மால் எளிதில் மீண்டு வெளியே வரமுடிவதில்லை...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+