திடீரென சர்வதேச அளவில் கவனம் பெற்ற சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் மகள்.. மேட்டர் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் மகள் பற்றிய தகவல் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜி மிங்சே பற்றிய தகவல் எதுவும் பெரிய அளவில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென கவனம் பெற்றுள்ளதற்கு அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் படிக்க செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்தான் காரணமாம்.

சீன அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சீனாவின் அதிபராக இருக்க கூடிய ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர் பற்றி அவ்வளவாக வெளியில் செய்திகள் கசிவது இல்லை. கம்யூனிச நாடாக அறியப்படும் சீனாவின் அதிபராக ஜி ஜிங்பிங்கிற்கு ஒரே ஒரு மகள் உள்ளார். இவரது பெயர் ஜி மிங்சே.

who-is-xi-mingze-a-rare-look-at-xi-jinping-s-reclusive-daughter

அமெரிக்காவில் மீண்டும் படிப்பதற்கு

இவரைப் பற்றிய தகவல் எதுவும் பெரிய அளவில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென ஜி மிங்சே பற்றிய தகவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு காரணம், ஜி மிங்சே அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் படிக்க செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்தான்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் சீனாவின் பாதுகாப்பு அதிகாரிகளான சிசிபி பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அவர் வசித்து வருவதாக டொனால்டு டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவரும் தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகருமான லவுரா லூமர் கூறியுள்ளார். இதையடுத்தே மிங்சே பற்றிய செய்திகள் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது.

பொதுவெளியில் தோன்றுவது அரிது

சீனாவின் ஃபுஜைன் மாகாணத்தில் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி பிறந்த ஜி மிங்சே, பெய்ஜிங்கில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். பிரெஞ்சு மொழியையும் அவர் படித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது பாதுகாப்பு கருதி புனைப்பெயருடன் சேர்ந்த அவர் 2014 ஆம் ஆண்டு சைக்காலாஜியில் பட்டம் வென்றார்.

ஜி மிங்சே பொதுவெளியில் தோன்றுவது மிகவும் அரிதான ஒன்றாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது, தானாக முன்வந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவர் ஈடுபட்டார். அதேபோல, 2013 ஆம் ஆண்டு லியாங்ஜிஹே கிராமத்தில் தனது பெற்றொருடன் பொதுவெளியில் வந்த அவர், சீன புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ரகசியம் காக்கப்பட்டு வருவதாக

இப்படி அரிதாக பொதுவெளியில் தோன்றும் அவரைப்பற்றிய தகவல்கள் எதுவும் மிகவும் ரகசியம் காக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சீன அதிபர் மகளான ஜி மிங்சே பற்றிய தகவலை ஆன்லைனில் பகிர்ந்ததால், கடந்த 2019 ஆம் ஆண்டு நியூ டெங்க்யு என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஜி மிங்சேவின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க அரசு காட்டிய கெடுபிடிகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த விவகாரம் அமைந்து இருந்தது. சீனாவில் அதிபராக இருக்க கூடிய ஜி ஜின்பிங்கின் தந்தையும் அந்த நாட்டில் அதிபராக இருந்தவர். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஜி மிங்சேவும் அரசியலுக்கு வரலாம் என்று யூகங்கள் அந்த நாட்டில் பரப்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அவரது தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+