காங்கோவை உலுக்கும் மர்ம நோய் தொற்று.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. WHO வெளியிட்ட வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

காங்கோ: காங்கோவில் தீவிரமாக் பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது. இங்கே ஒரு விரைவான சுருக்கம்:

காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோய் 143 பேரைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

fever flu

பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தின் துணை ஆளுநரான ரெமி சாகி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக சுகாதார மையம் அறிக்கை: காங்கோவில் தீவிரமாக் பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது. இங்கே ஒரு விரைவான சுருக்கம்:

• கேஸ்கள் மற்றும் இறப்புகள்: 406 சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன, 143 இறப்புகள் (100 சுகாதார மையங்களில், 43 வீட்டில்)
• மக்கள்தொகை: பெரும்பாலான கேஸ்கள் குழந்தைகளை தாக்கி உள்ளது. அனைத்து கடுமையான கேஸ்கள்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களை அதிகம் தாக்கி உள்ளது.
• எப்போது தொடக்கம்: அக்டோபர் 24 அன்று முதல் கேஸ் பதிவானது. நவம்பர் தொடக்கத்தில் கேஸ்கள்உச்சத்தை எட்டியதாகத் தெரிகிறது ஆனால் பரவல் இன்னும் தொடர்கிறது.
• காரணங்கள்: கடுமையான நிமோனியா (சுவாசப் பாதை தொற்று), இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19, தட்டம்மை, ஈ.கோலி மற்றும் மலேரியாவிலிருந்து வரும் ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம், ஊட்டச் சத்து குறைபாடு ஆகியவை பங்களிக்கும் காரணியாகும்.
• ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
• குடும்பங்களுக்குள் பரவக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது.

பங்களிக்கும் காரணிகள்

• உணவுப் பாதுகாப்பின்மை: உணவில் சுகாதாரம் இல்லாமல் போனால் இந்த நோய் ஏற்படலாம் என்கிறார்கள். குவாங்கோ மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு நிலை சமீபத்தில் மோசம் அடைந்தது. ஏப்ரலில் "ஏற்றுக்கொள்ளக்கூடியது" என்பதிலிருந்து செப்டம்பரில் "நெருக்கடி நிலை"க்கு மோசமடைந்தது. இதுவும் ஒரு காரணம்.

• மோசமான சுகாதாரம்: பொதுவான நோய்களுக்குக் கூட சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை, குறைந்த தடுப்பூசி கவரேஜ், சரியான டெஸ்டிங் முறைகள் இல்லை, சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு காரணம்.

• கடினமான முறை: இந்த நோய் பரவல் கிராமங்களில் ஏற்பட்டு உள்ளது. மழைக்காலம் காரணமாக சாலை வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் கவரேஜ் குறைவாக உள்ளது. இதனால் மக்களிடம் ஆன்லைன் சிகிச்சை கூட அளிக்க முடிவது இல்லை.

அறிகுறிகள்: பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த னாய் ஏற்பட்டு வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,

சளி,

இருமல்,

அதிக காய்ச்சல்,

உடல்வலி,

தலைவலி,

தும்மல்,

மூக்கு அடைப்பு ,

தொண்டை புண்,

கண்களில் நீர் வடிதல்,

மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.

சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+