நீ 'பிளேபாய்'னா... நான் 'உலக நாயகன்'டா..இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஒரு கிளுகிளு போட்டி!
லாஸ் ஏஞ்செலஸ்: என்னென்னமோ போட்டியெல்லாம் இந்த உலகத்துல நடக்குது பாருங்க... இன்ஸ்டாகிராமில் இப்போது இந்தப் போட்டிதான் செம ஹாட்.. அதாவது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லுக்கும், இன்ஸ்டாகிராமின் பிளேபாய் என்ற செல்லப் பட்டத்துடன் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கும் டேன் பில்செரியனுக்கும் இடையே யார் ஒரிஜினல் இன்ஸ்டாகிராம் பிளேபாய் என்ற போட்டி களை கட்டியுள்ளது.
இருவருமே அழகிகளுடன் இருக்கும் "அதி பயங்கர" புகைப்படங்களைப் போட்டு போட்டியை ஹீட்டாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்களின் குளு குளு புகைப்பட போட்டியால் இன்ஸ்டாகிராமே கிளுகிளுப்பாகியுள்ளது. ரசிகர்கள் கூட்டம் இரு பாதையாக பிரிந்து இருவருக்கும் சரமாரியான ஆதரவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்மூர் அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு போல..
நம்மூரில் அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு என்று அடித்துக் கொண்டிருப்பதைப் போல இன்ஸ்டாகிராமில் இவர்களில் யார் ஒரிஜினல் பிளேபாய் என்ற போட்டி விறுவிறுப்பாகியுள்ளது.

ரொம்ப நாளாக டேன்
டேன் பில்செரியன்தான் நீண்ட காலமாக இன்ஸ்டாகிராம் பிளேபாய் என்ற செல்லப் பட்டத்துடன் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வந்துருச்சுல்ல போட்டி..
ஆனால் டேன் இனிமேல் கிறிஸ் கெய்லிடம் பிச்சை எடுக்க வேண்டியதுதான் என்று கெய்ல் ஆதரவாளர்கள் கிளம்பி விட்டனர்.

அழகிகளுடன் அமர்க்களம் செய்யும் டேன்
டேனின் பொழுதுபோக்கே அழகிகளுன் ஊர் ஊராக சுற்றுவதுதான். நிர்வாணமாகவும், அரை குறை உடையுடனும் அழகிகள் புடை சூழ அவர் அடிக்கடி எங்காவது போய் விடுவார். பின்னர் அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டு பார்ப்பவர்களைப் பொறாமைப்பட வைப்பார்.

கெய்ல்தான் இனிமேல் ஒரிஜினல் பிளேபாய்
ஆனால் தற்போது டேனுக்கு சரியான போட்டியாக கிளம்பி வந்துள்ளார் கெய்ல். இவரும் அழகிகள் புடைசூழ அதகளப்படுத்த ஆரம்பித்துள்ளார். சரிக்குச் சரி போட்டியாக டேனுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களைப் போட்டுத் தாக்கி வருகிறார்.

டேனுக்கு 40 லட்சம்
ஆனால் டேன் பில்செரியனுக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

கெய்லுக்கு 70,000தான்
ஆனால் அதிரடிப் புயல் கெய்லுக்கு 70,000 பாலோயர்கள்தான் உள்ளனர். ஆனால் வெயிட் சாரே.. இன்னும் கொஞ்ச நாளில் டேனைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு எங்காளு ஓட விடுவார் பாருங்க என்று கெய்ல் ஆதரவாளர்கள் கொக்கரிக்கின்றனர்.

நீ பிளேபாய்னா.. நான் உலக நாயகன்டா..
டேன் குறித்து கெய்ல் கூறுகையில் அவர் இன்ஸ்டாகிராமுக்கு மட்டும்தான் பிளேபாய்.. ஆனால் நான் உலக நாயகன் அதாவது வேர்ல்ட் பாஸ் என்று தொடை தட்டி சீறுகிறார்.

உறையில் ஒரு கத்திதான்
ஆனால் இந்த சவாலால் தான் பயப்படவில்லை என்று கூறுகிறார் டேன். இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு பிளேபாய்தான். அது நான்தான் என்று சளைக்காமல் பதில் சவால் விடுகிறார்.

போட்டி போட்டு போட்டோக்கள்
ஆனால் இருவரும் இப்போது போட்டி போட்டு அழகிகளுடன் இருக்கும் அஜால் குஜால் ரக புகைப்படங்களை மாற்றி மாற்றிப் போட்டு பிரளயத்தை உண்டு பண்ணி வருகின்றனர்.
நீங்க நல்லா பாத்துச் சொல்லுங்க.. யார் சார் உண்மையான பிளேபாய்.. ??
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications