ஓமிக்ரானை விட வேகமாக பரவும் BA.2.. 57 நாடுகளில் கண்டுபிடிப்பு.. ஹூ எச்சரிக்கை
ஜெனீவா: ஓமிக்ரானை காட்டிலும் அதன் துணை வேரியண்ட் BA.2 மிகவும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் 57 நாடுகளில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேரியண்ட் வேகமாக பல நாடுகளுக்கு பரவியது.
இந்த வேரியண்ட் டெல்டாவை விட வேகமாக இருக்கும் போதிலும் அதன் பாதிப்பு குறைவாக இருந்ததால் நிபுணர்கள் நிம்மதியடைந்தனர். மேலும் ஓமிக்ரான் டெல்டாவை போல் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்பதே நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்தது.

துணை வேரியண்ட்
இந்த நிலையில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் (sub variant) BA.2 பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த நிபுணர் மரிய வான் கெர்கோவ் கூறுகையில் புதிய சப் வேரியண்ட் பிஏ.2 மிகவும் ஆபத்தானது. ஓமிக்ரான் வைரஸின் 4 புதிய வேரியண்ட்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

சப் வேரியண்ட்
தற்போது வரை இந்த புதிய சப் வேரியண்ட் 57 நாடுகளில் பரவியுள்ளது. உலகில் பாதிக்கப்படும் ஓமிக்ரான் கேஸ்களில் பாதிக்கு பாதி இந்த புதிய சப் வேரியண்ட் காணப்படுகிறது. இது முற்றிலும் ஆபத்தானது என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதிப்பு
பிஏ.2-பல்வேறு முறை உருமாற்றங்கள் அடைகிறது. அதன் ஸ்பைக் புரோடீனிலும் மாற்றம் ஏற்பட்டு மனித செல்களில் நுழைந்துவிடுகிறது. 4 புதிய வேரியண்ட்களில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகிறோம். ஓமிக்ரானை விட பிஏ.2 வேகமாக பரவினாலும் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரியவில்லை என்றார்.
Recommended Video

தடுப்பூசி
மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். எங்கு சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டு வைரஸ் பாதிப்பு லேசாக இருக்கிறது. ஓமிக்ரானுடன் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் துணை வேரியண்ட் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications