அடுத்து காசாவை ஆளப்போவது யார்? இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பிறகு.. அடுத்து என்ன நடக்கும்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், இந்த போரின் முடிவு என்னவாக இருக்கும், சண்டைக்குப் பிறகு காசாவில் யார் ஆட்சியை அமைப்பார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் போர் என்பது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் முதலில் ஹமாஸ் கை ஓங்கி இருப்பது போலத் தெரிந்தாலும் கூட சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது.

இப்போது காசா மீது இஸ்ரேல் தான் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. விரைவில் முழு வீச்சிலான படையெடுப்பையும் இஸ்ரேல் நடத்தும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ராணுவத் தாக்குதல் முடிவடையும் போது காசாவை ஆட்சி செய்வது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹமாஸ்: பாலஸ்தீன ஆதரவு குழுக்களில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுதான் ஹமாஸ். சுமார் 24 லட்சம் மக்களைக் கொண்ட காசா பகுதியைக் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த ஹமாஸ் படை தான் நிர்வகித்து வருகிறது.. ஹமாஸ் அங்கே ஆட்சிக்கு வந்த பிறகே, காசாவை சுற்றி இஸ்ரேல் தனது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அங்கே கடும் மோதலுக்கு பிறகே ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அப்போது காசா மற்றும் மேற்கு கரை நிர்வகிக்க பாலஸ்தீனிய அதிகார சபை என்ற அமைப்பு இருந்தது. அந்த அமைப்புடன் நடந்த மோதலை தொடர்ந்தே ஹமாஸ் காசா பகுதி முழுக்க தன்வசம் கொண்டு வந்தது. அப்போது முதல்தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமானது. காசா மீது கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன.
அமெரிக்கா சொல்வது என்ன: சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் கூட காசா பகுதியின் கட்டுப்பாடு என்பது ஹமாஸிடம் இருந்து பாலஸ்தீன அதிகார சபைக்குத் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்த அமைப்பு அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
ஆப்ஷன் 1: தற்போது மேற்குக் கரையில் குறிப்பிட்ட பகுதிகளைப் பாலஸ்தீன அதிகார சபையே நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு "விரிவான அரசியல் தீர்வு" காணப்பட்டால் மட்டுமே காசாவில் பாலஸ்தீன அதிகார சபையால் அதிகாரத்திற்கு வர முடியும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
இருப்பினும் 88 வயதான பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுக்கு மக்களிடையே ஆதரவு பெரிதாக இல்லை. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் நிலையில், அதைப் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
ஆப்ஷன் 2: மறுபுறம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களுக்குக் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தங்கள் சண்டை ஹமாஸுடன் தானே தவிர பாலஸ்தீன மக்களுடன் இல்லை என்று குறிப்பிட்ட அவர், காசாவை ஆக்கிரமிப்பது அல்லது ஆட்சி செய்ய தங்களுக்குத் திட்டம் இல்லை என்றார். மேலும், காசாவில் மக்களாட்சி முறையில் ஒரு அரசு அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கடைசி ஆப்ஷன்: அதேநேரம் இதை ஏற்க மறுக்கும் லெபனானில் உள்ள ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்தான், காசா பகுதியில் ஒரு பொம்மை அரசை ஹமாஸ் ஒருபோதும் ஏற்காது என்றும் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். அமெரிக்கா போடும் இதுபோன்ற திட்டங்களை ஹமாஸ் ஒருபோதும் நம்பாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஹமாஸை தான் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இப்படி எல்லா பக்கமும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்த பிறகு, காசாவில் என்ன நடக்கும் என்பதில் குழப்பமே நிலவி வருகிறது. ஆனால், தற்போது இருக்கும் ஆப்ஷன் இந்த மூன்றும் தான். இவர்களில் யாராவது ஒருவர் கட்டுப்பாட்டில் தான் காசா பகுதி வரும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications