யாருடைய படை சிறந்தது? இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரில் வெற்றி யாருக்கு கிடைக்கும்? இத படிங்க
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளின் படைப்பலம் மற்றும் போரில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காசா தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இஸ்ரேலை ஹமாஸ் அமைப்பு காசாவில் நுழைய விடாமல் தடுத்து வருகிறது.

இதனால் காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கும் நிலையில் ஹமாஸ் தடையாக உள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் திடீரென்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் கார், பாராசூட்டில் ஹமாஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதையடுத்து போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல் படையினர், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். காசா பகுதிக்குள் நுழைந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது போர் நடந்து வருகிறது.

தற்போது வரை இருதரப்பினரையும் சேர்த்து 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் போர் உக்கிரமடைய உள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று அறிவித்துள்ளார். இதனால் இன்று 2வது நாளாக பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ராணுவ படை பலம் குறித்தும், போரில் யாருடைய கை ஓங்கும் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது ராணுவம், விமானப்படை, கப்பற்படையை பொறுத்தமட்டில் இஸ்ரேல் மிகவும் வலுவாக உள்ளது. இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களுடன் பல பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேல் கைவசம் வைத்துள்ளது.
நவீன உபகரணங்கள், சிறந்த உளவுத்துறை அமைப்பை இஸ்ரேல் வைத்துள்ளது. அதோடு அதிநவீன போர் விமானங்கள் உள்ளன. அதாவது ஐடிஎப் எனும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை என்பது தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையை ஒருங்கிணைத்துள்ளது. மேலும் இஸ்ரேலை பொறுத்தமட்டில் கட்டாய ராணுவ சேவை என்பது நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்கள் ராணுவம், ஆயுத பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.

மேலும் உலகில் மிகச்சிறந்ததாக கருதப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ‛அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம்' அமைப்பை இஸ்ரேல் வைத்துள்ளது. அதேபோல் டேவிட் ஸ்லிங் மற்றும் அரோ போன்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை இஸ்ரேல் கைவசம் வைத்துள்ளது. கடற்படையை பொறுத்தமட்டில் ஏவுகணை தாங்கும் கப்பல், நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் வைத்துள்ளது.
ஆனால் இஸ்ரேலை ஒப்பிடும்போது பாலஸ்தீனத்தின் படைப்பலம் என்பது ஒருங்கிணைந்ததாக இல்லை. காசாவில் ஹமாஸ் படையும், மேற்கு கரைப்பகுதியில் பாலஸ்தீனத்தின் படையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் சில துணை ராணுவப் படைகள் இருந்தாலும் பயிற்சி, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால் இஸ்ரேலை ஒப்பிடும்போது பாலஸ்தீனத்தின் படை பின்தங்கி உள்ளது.
இதுதவிர இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுடன் நல்ல உறவை வைத்துள்ளது. அமெரிக்காவும் கூட தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக தான் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திலும் கூட அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். இதனால் அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கலாம். ஆனால் பாலஸ்தீனம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு மேலை நாடுகளின் ஆதரவு இல்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உள்ளன.
மேற்கூறிய இந்த விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால் பாலஸ்தீனத்தை ஒப்பிடும்போது ராணுவ பிரிவில் இஸ்ரேலின் கை ஓங்கி உள்ளது. இருப்பினும் கூட இந்த போரில் வெற்றி பெறுவது யார்? என்பதை நாம் வெளிப்படையாக கூறிவிட முடியாது. ஏனென்றால் இந்த போரின் முடிவு என்பது இருநாடுகளின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும். தற்போதைய சூழலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இஸ்ரேலின் முக்கிய உளவு அமைப்பை மீறி அவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதோடு, இஸ்ரேலின் முக்கிய படை தளபதியான 'நிர்மோத் அலோனியை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர் தான் காசாவின் கட்டுப்பாட்டு படைப்பகுதித் தலைவராகவும் சில காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது இஸ்ரேலுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். ராணுவப்படைப்பிரிவு, ஆயுதப்பலம் உள்ளிட்டவற்றில் இஸ்ரேலை ஒப்பிடும்போது பின்தங்கி இருந்தாலும் கூட பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளனர்.
இதனால் அவர்கள் சரியான திட்டமிடல் மற்றும் இஸ்ரேலை எதிர்க்க தேவையான வலிமையை பெற்ற பிறகே அவர்கள் தாக்குதலை முன்னெடுத்து இருக்கலாம் என விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் இப்போதே போரில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை கூறிவிட முடியாது. இதனை அறிய நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications