ஈரான் மீது சர்ப்ரைஸ் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. திடீர் அட்டாக்கில் வெற்றிபெற்றது யார்?
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் என்ன நடந்தது. இரண்டு தரப்பும் சொல்வது என்ன என்று இங்கே பார்க்கலாம்.

இஸ்ரேல் தரப்பு வாதம்:
1. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
2. ஈரான் மீது மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
3. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
4. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
5. இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
6. முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
7. முக்கியமாக ஈரானிய ராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை தயாரிப்பு நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் மற்ற பைட்டர் உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலைமை மோசமாகி உள்ளது
ஈரான் வாதம்:
1. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
2. இஸ்ரேல் விமானங்கள் உள்ளே வந்தாலும் அவர்களின் குண்டுகளை ஈரானின் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்துள்ளன.
3. ஈரானின் போர் விமானங்கள் உடனே வானிற்கு வந்ததால் இஸ்ரேல் விமானங்கள் வெளியேறிவிட்டனர்.
4. இதனால் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.
5. இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களை நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஆனால் அவை பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை.
6. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7. இஸ்ரேலிய தாக்குதல்கள் Ilam, Khuzestan மற்றும் Tehran மாகாணங்களில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து, குறைந்த அளவு சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்து உள்ளது. ஈரானின் ரேடார் அமைப்புகள் முதலில் F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் மூலம் தாக்கப்பட்டது. . ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
வெற்றி யாருக்கு?: இரண்டு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களை சொல்வதால் இந்த மோதலில் இதுவரை யார் வென்றது என்பது தெளிவாக வெளியாகவில்லை.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications