Video: அமெரிக்க சாம்ஸ் கிளப் கடையில் டயரெல்லாம் விக்கிறாங்கப்பா!
சார்லேட்: நம்ம ஊர் மால்களில் விற்பதையெல்லாம் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சாம்ஸ் கிளப் பல் பொருள் அங்காடியின் விற்பனைப் பொருட்கள் சற்றே மிரள வைக்கின்றன.
அமெரிக்காவில் பெரிய கடை என்றால் நம் நினைவுக்கு வருவது வால்மார்ட் தான். வால்மார்ட்டில் கிடைக்காத பொருட்கள் இல்லை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அந்த வால்மார்ட்டுக்கே டான் என்று சொல்லலாம் அல்லது வால்மார்ட்டுக்கு அண்ணன் என்று சொல்லும் மொத்த விற்பனை கடை தான் சம்ஸ் கிளப்.
இங்கு சும்மா கை வீசிக்கொண்டும் போக முடியாது. இல்லை என்கிட்ட கிரெடிட் கார்டு இருக்கு என்று அதை தூக்கி கொண்டு மட்டும் போக முடியாது.. அந்த கடைக்கு என்று தனி கார்ட் நாம் வைத்திருக்க வேண்டும். வருடந்தோரும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி கார்டு வாங்கி வைத்திருக்க வேண்டும்.
அப்படி இருந்தும் எல்லோரும் அமெரிக்காவில் அந்த மெம்பர்ஷிப் கார்டு வாங்கி வைத்து கொண்டு அங்கு வாரம் தோறும் போகிறார்கள். ஏன் நம்ம ஆட்களும் தான்.
சரி அப்படி அங்க என்ன ஸ்பெஷல் வாங்க வீடியோவில் பார்க்கலாம்.. அமெரிக்காவில் மொத்த விற்பனை செய்கிற கடைகள் எப்படி இருக்கும் . அங்க எப்படி எல்லாம் ஜோரா வியாபாரம் பண்ணி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள் என்று சொல்ல தான் இந்த பதிவு. சரி வாங்க ஷாப்பிங் போலாமா.
- Inkpena சஹாயா