ஒரே நாளில் 150 நிலநடுக்கம்.. கதறி ஓடும் பொதுமக்கள்! ஜப்பானை மட்டும் இயற்கை வஞ்சிப்பது ஏன்.. பகீர்
டோக்கியோ: புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரே நாளில் சுமார் 150 பூகம்பம் ஏற்பட்டது. இதற்கான காரணத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் புத்தாண்டு தினத்தன்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலேயே கட்டப்பட்டு இருக்கும். இதன் காரணமாகவே அங்கே இவ்வளவு பெரிய பூகம்பம் ஏற்பட்டும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது.
நிலநடுக்கம்: கடந்த 2011இல் அங்கே ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 150 நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டுள்ளது. ஜப்பான் உலகின் மிகவும் ஆக்டிவாக உள்ள நில அதிர்வு மண்டலங்களில் ஒன்றாகும். நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதன்மையானதாக ஜப்பான் இருக்கிறது.
ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதலில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நானோவில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
சுனாமி எச்சரிக்கை: இந்த நிலநடுக்கம் ஜன. 1ஆம் தேதி நாட்டின் ஜப்பான் கடலோரப் பகுதிகள் அனைத்திற்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது, பலரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது தான் இந்த பூகம்பம் தாக்கியுள்ளது. அத்துடன் 1.2 மீட்டர் உயரத்தில் சில சுனாமி அலைகளும் தாக்கியுள்ளது. இருப்பினும், அதில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கடந்த 2018இல் அங்கே மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பாக இது கருதப்படுகிறது. சுமார் 200+ கட்டிடங்கள், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அமைப்புகள் கடந்த கால டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது மற்றொரு வலிமையான நிலநடுக்கம் ஏற்பட 20% வரை வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அங்கே சுமார் 150+ மினி நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதிக பாதிப்பு ஏன்: சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. ஏன் ஜப்பானில் இப்படிக் குறுகிய நேரத்தில் அதிகபட்ச நிலநடுக்கம் ஏன் ஏற்பட்டது என்பதைப் பார்க்கலாம். நோட்டோ தீபகற்பத்தில் பல ஆக்டிவ் ஃபால்ட்கள் உள்ளன, இவை நிலத்திற்கு அடியில் இருக்கும் தகடுகளை ஒன்றாகத் தள்ளுகிறது.. இதனால் இவை ஒன்றுடன் ஒன்று வலிமையாக மோதும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே 2018 முதல் இங்கே பூகம்பங்கள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக வடக்கு ஜப்பானில் தான் வலிமையான நிலநடுக்கம் அதிகம் ஏற்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கே பதிவு செய்யப்பட்ட நில அதிர்வு செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இங்கே 14,000க்கும் மேற்பட்ட சிறிய பூகம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மேலோடு சிதைவு மண்டலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், திரவ இயக்கங்களால் இந்த பூகம்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அலர்ட் தரும் அமைப்பு: இதுபோன்ற வலிமையான பூகம்பங்கள் ஏற்படும் போது எச்சரிக்கை கொடுக்க அவர்கள் ஒரு அமைப்பை வைத்துள்ளனர். இருப்பினும், நிலநடுக்கத்தை மற்ற இயற்கை பேரிடர்களை போலத் துல்லியமாகக் கணிக்க முடியாது. எனவே, இந்த எச்சரிக்கை அமைப்பு கடந்த 2018, 2020 ஆண்டுகளில் தவறான அலர்ட்டை கொடுத்தது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய சம்பவங்களும் அங்கே நடந்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications