ஓடியாங்க, ஓடியாங்க.. போனஸ் மட்டுமே 24 கோடி ரூபாய் பிடிங்க! அள்ளித்தந்த ஓனர்! ஆச்சரியத்தில் ஊழியர்கள்
தனது ஊழியர்களுக்குப் பல கோடி ரூபாயை ஆஸ்திரேலியா பணக்காரர் ஜினா ரைன்ஹார்ட் பல கோடியை அள்ளிக் கொடுக்கிறார்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பெரும் பணக்காரரான ஜினா ரைன்ஹார்ட், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 41 ஊழியர்களுக்கு இந்திய மதிப்பில் 24 கோடி ரூபாயை போனஸாக அளித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் பலரும் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை நன்கொடையாக அளித்துவிடுவார்கள். வாரன் பஃபெட், பில் கேட்ஸ் என்று பலரையும் நாம் இதில் உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தியாவிலும் கூட டாடா, பிர்லா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி எனப் பலரும் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு உதவும் வகையில் நன்கொடையாக அளித்துவிடுவார்கள்.

ஆஸ்திரேலியா
இன்னும் சிலர் தங்கள் அலுவலகத்திலேயே நீண்ட காலம் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்குச் சிறப்பான சர்ப்ரைஸ் கிஃப்ட்களை வழங்குவார்கள்.. அப்படியொரு சம்பவம் தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் சுரங்க துறை பணத்தை அள்ளித்தரும் பிஸ்னஸாக உள்ளது. அங்கு நிலத்திற்கு அடியே விலைமதிப்பற்ற பல்லாயிரம் தாதுகள் புதைந்து கிடப்பதே இதற்குக் காரணமாகும்.. அப்படி சுரங்க பிஸ்னஸில் பல ஆயிரம் கோடி சம்பாதித்த பெருங்கோடீஸ்வரர் தான் ஜினா ரைன்ஹார்ட்.!

ஜாக்பாட்
69 வயதான இந்த ஜினா ரைன்ஹார்ட் தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளார். அங்குச் சுரங்க பிஸ்னஸில் இவர் கொடி கட்டி பறந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தான் இப்போது ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் தான் இப்போது தனது சொந்த ஊழியர்களுக்கு 4.1 கோடி ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 24 கோடி ரூபாய்) பரிசாகத் தரவுள்ளார். மொத்தம் 41 ஊழியர்களுக்கு தலா ஒரு லட்ச ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் 57 லட்ச ரூபாய்) என்ற விகிதத்தில் மொத்தம் 4.1 கோடி ஆஸ்திரேலிய டாலரை தருகிறார்..

சுமார் 24 கோடி ரூபாய்
ஹான்காக் மைனிங் நிறுவனத்தில் இவர் 41 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் 41 ஊழியர்களுக்கு இந்த பரிசை தருகிறார்.. இவர் இன்று 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த கிப்டை அவர் தனது ஊழியர்களுக்கு வழங்குகிறார். யாருக்கெல்லாம் இந்த மெகா ஜாக்பாட் கிடைக்கும் என்பது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நீண்ட காலம் வேலை செய்தவர்களுக்கும் இது கிடைக்கலாம்.. அல்லது நிறுவனத்தில் சேர்ந்து சில மாதங்கள் ஆனவர்களுக்கும் கூட இந்த ஜாக்பாட் கிடைக்கும்.

முதல்முறை இல்லை
ஆஸ்திரேலியாவின் பெரும் பணக்காரரான ஜினா ரைன்ஹார்ட்டின் சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1.9 லட்சம் கோடி) ஆகும். ஹான்காக் நிறுவனத்தை நடத்தி வந்த இவரது தந்தை, 1992இல் மறைந்ததைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார். அதேபோல அவர் இதுபோல நன்கொடை கொடுப்பது இது முதல் முறையில்லை. கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் அவர் தனது ஊழியர்களில் 10 பேருக்கு தலா ஒரு லட்ச ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் 57 லட்ச ரூபாய்) கொடுத்திருந்தார்.

வருடாந்திர போனஸ்
ரைன்ஹார்ட் நிறுவனம், தனது ஊழியர்களும் தங்களுடன் வளர வேண்டும் என்ற பரஸ்பர வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டதாகத் தெரிகிறது.. 2018ஆம் ஆண்டில், முதல் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முந்தைய ஆண்டில் நிறுவனத்திற்குக் கிடைத்த வருவாயில் இருந்து பெரும் பகுதியை வருடாந்திர போனஸாக தந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்பு அவர்கள் இந்த போனஸை கொடுத்துவிடுகிறார்கள்.

ஜினா ரைன்ஹார்ட்
இது தொடர்பாக ஜினா ரைன்ஹார்ட் கூறுகையில், "லாபங்களை அனைத்து ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.. ராய் ஹில் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்தால், அனைத்து ஊழியர்களுக்கும் அது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்... கிறிஸ்துமஸுக்கு முன்பே அனைத்து ஊழியர்களுக்கும் இந்த வருடாந்திர ஊதியம் வழங்கப்படும். எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு வெகுமதி அளிக்கும் வகையில் டிசம்பரில் முதல் வருடாந்திர ஊதியத்தை வழங்குகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications