இஸ்ரேல் கையில் குடுமி.. இஸ்லாமிய நாடுனு கூட பார்க்கலையே.. ஈரானை ஆதரிக்க தயங்கும் அஜர்பைஜான்! பின்னணி
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஈரான் பக்கம் நிற்கின்றன. ஆனால் ஈரானை போல் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அஜர்பைஜான், ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்காமல் நழுவி உள்ளது. அஜர்பைஜானின் நெருங்கிய கூட்டாளியான துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்டவை ஈரான் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது. ஆனால் அஜர்பைஜான் விலகி நிற்பதன் பின்னணியில் அதன் குடுமி இஸ்ரேலிடம் இருப்பது தான். அது என்ன? வாங்க பார்க்கலாம்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்த மோதல் போராக மாறும் அச்சம் உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், துருக்கி உள்பட பல இஸ்லாமிய நாடுகள் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளன. மேலும் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் கூட 21 இஸ்லாமிய நாடுகள் இணைந்து இஸ்ரேல் நடவடிக்கையை கண்டித்தன. இந்த கண்டிப்பு நடவடிக்கையில் இருந்து அஜர்பைஜான் விலகியே உள்ளது. அதாவது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்க அந்த நாடு மறுத்து வருகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் ஈரான் ஷியா முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் நாடு. அதேபோல் அஜர்பைஜானிலும் ஷியா முஸ்லிம்கள் தான் அதிகம் இருக்கின்றனர். சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் இருக்கும் நாடுகளே தங்களுக்கும் இருக்கும் வேற்றுமையை மறந்து ஷியா நாடான ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளன. ஆனால், ஷியா பிரிவு இஸ்லாமிய நாடான அஜர்பைஜான் இதில் விலகி நிற்பது தான் பலரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
மேலும் அஜர்பைஜானை எடுத்து கொண்டால் அதன் நெருங்கிய நட்பு நாடுகளாக பாகிஸ்தான், துருக்கி உள்ளன. இதனால் தான் சமீபத்தில் பாகிஸ்தானை நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக தாக்கியபோது அஜர்பைஜான் நம்மை கண்டித்தது. அதோடு பாகிஸ்தான் பக்கம் நின்றது. ஆனால் இப்போது ஈரானுக்கு அஜர்பைஜான் ஆதரவு தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் தான்.
யூத நாடான இஸ்ரேலுக்கும், ஷியா இஸ்லாமிய நாடாக இருக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நெருங்கிய வர்த்தக உறவு உள்ளது. அஜர்பைஜானின் பொருளாதாரத்தில் இஸ்ரேல் முக்கிய பங்காற்றி வருகிறது. அஜர்பைஜானிடம் இருந்து இஸ்ரேலுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒன் மில்லியன் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை அஜர்பைஜானிடம் இருந்து இஸ்ரேல் வாங்கி உள்ளது. இப்படியான சூழலில் ஈரானுக்கு ஆதரவாக அல்லது இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்தால்அது இஸ்ரேல் - அஜர்பைஜான் நாட்டின் வர்த்தகத்தை பாதிக்கும்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம்நாட்டு மக்களின் எதிர்ப்பை அஜர்பைஜான் சம்பாதித்துள்ளது. நம் நாட்டில் இருந்து அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை மக்கள் நிறுத்தி உள்ளனர். அதேபோல், அஜர்பைஜானுடனான வர்த்தக உறவையும் நம் நாட்டு வர்த்தகர்கள் கைவிட்டுள்ளனர். இது அஜர்பைஜானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தால் இஸ்ரேலும் அந்த நாட்டை கைவிடும். இதனால் எதுக்கு வம்பு என்று இஸ்ரேல் - ஈரான் மோதலில் மவுனமாகி உள்ளது அஜர்பைஜான்.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications