"டிரஸே போட வேண்டாம்.." நீச்சல் குளத்தில் பெண்கள் இப்படியும் இருக்கலாம்! வந்தது புது உத்தரவு
ஜெர்மனி அரசு மேலாடையில்லாமல் குளிப்பது குறித்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் இப்போது ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பும் மேலாடையில்லாமல் நீச்சலடிக்க அனுமதி தந்துள்ளது. இதற்கான காரணம் தான் ரொம்பவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பல வித்தியாசமான பழக்கங்கள் நடைமுறையில் இருக்கிறது. அப்படிதான் ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் ஒரு புது உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்
அதன்படி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது குளங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு பாலரும் மேலாடையில்லாமல் நீச்சல் அடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி
பெர்லின் நகரில் அனைத்து தரப்பும் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் பல பொது நீச்சல் குளங்கள் இருக்கிறது. அப்படி ஒரு நீச்சல் குளத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சன் பாத் எனப்படும் சூரிய குளியலை எடுத்துள்ளார். இதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்களை அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து தன்னை வெளியேற்றியது தவறு என்று கூறி அந்த பெண் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தார்.

சன் பாத்
ஆண்கள் மேலாடையில்லாமல் சன் பாத் எடுக்க அனுமதி இருக்கிறது. எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் தாங்கள் விரும்பினால் மேலாடையின்றி குளிக்க அனுமதி தர வேண்டும் என்று அந்த பெண் அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெலியாகவில்லை. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தினர்.

பாகுபாடு
இதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக பெர்லின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.. இதையடுத்து பெர்லினின் நீச்சல் குளங்களுக்கு வரும் அனைவருக்கும் இப்போது மேலாடை இல்லாமல் குளிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய உத்தரவின் அடிப்படையில் பெர்லினில் இருக்கும் அனைத்து நீச்சல் குளங்களும் ஆடை விதிகளை அதற்கேற்ப மாற்றியது. அதன்படி ஆண், பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாடை இல்லாமல்
இந்த உத்தரவு அனைத்து தரப்பினரும் மேலாடை இல்லாமல் குளிக்க சட்டப்பூர்வமாக பாதுகாப்பை அளிக்கிறது. இது தொடர்பாக ஜெர்மனி அதிகாரிகள் கூறுகையில், "இப்போது இந்த உத்தரவை அமல்படுத்துவது ரொம்பவே முக்கியம். புதிய உத்தரவின்படி யாருக்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார். அதேநேரம் இந்த புதிய குளியல் விதிகள் எப்போது அமலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ப்ரீ பாடி கல்சர்
அதேநேரம் ஜெர்மனியில் இப்போது ப்ரீ பாடி கல்சர் ("free body culture") டிரெண்டாகி வரும் நிலையில், இதைப் பலரும் வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் இப்போது நீச்சல் குளங்களில் அனைத்து பாலினங்களுக்கும் மேலாடையில்லாமல், அதேநேரம் இதை எப்படி வரைமுறைப்படுத்துவது உள்ளூர் அமைப்புகளின் முடிவாகும். அதாவது, அனைத்து நீச்சல் குளங்களில் இருக்கும் விதி என்பது இரு பாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதே உத்தரவு. மேலாடையில்லாமல் நீச்சலடிக்க இரு பாலருக்கும் அனுமதி தராமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

அனுமதி
முன்னதாக கடந்த ஆண்டு, அங்கு நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள சீஜென் மற்றும் லோயர் சாக்சனியில் பல நகரங்களில் பொதுக் நீச்சல் குளங்களில் மேலாடையின்றி நீச்சலடிக்க அனுமதி தரப்பட்டது. இருப்பினும், சில மாதங்களிலேயே லோயர் சாக்சோனி அதன் விதிகளை மாற்றியது. அதாவது நீச்சல் குளங்களில் பாலின உறுப்புகளை மட்டுமே மறைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications