"இந்தியர்கள் வேண்டாம்.. வெளியே போங்க.." கனடா விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்.. என்னதான் பிரச்சினை
ஒட்டாவா: கனடாவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு எதிராக சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

கல்லூரி படிப்பை மேற்கொள்ளவும், வேலை செய்யவும் வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றாகக் கனடா இருக்கிறது.
வெளிநாட்டவர்: கனடாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து கனடா செல்வோரின் எண்ணிக்கை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இத்தனை நாட்களாகக் கனடாவின் வெளியுறவுக் கொள்கையும் வெளிநாட்டு மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இருந்தது. இதனால் அங்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
"காலிஸ்தானி" விவகாரம்.. 3 இந்தியர்களை கைது செய்த கனடா போலீஸ்! இரண்டே வரியில் ஜெய்சங்கர் நறுக் பதில்
குறிப்பாக 2013க்கு பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.. 2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 32,828இல் இருந்து 139,715ஆக உயர்ந்துள்ளது.. 10 ஆண்டுகளில் இது 326% அதிகமாகும்.. அதேபோல கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 62,223ஆக இருந்த நிலையில், 2021இல் அது 4,00,521ஆக உயர்ந்துள்ளது.. இது சுமார் 544% அதிகமாகும்.
இந்தியர்கள்: இந்தியா உட்படச் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பல விதங்களில் கனடா பொருளாதாரத்திற்கு உதவியே இருக்கிறது.. அதேநேரம் இது கனடாவில் எதிர்ப்பையும் கிளப்பியது. இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கனடா நாட்டவர்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதத் தொடங்கினர். இதனால் ஒரு சில இடங்களில் சமீப காலமாகவே எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.
கட்டுப்பாடுகள்: அதன்படி கனடாவின் மிகச்சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வர்ட் தீவு வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான பெர்மிட்களை 25% குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. புதிதாக வருவோருக்கு மட்டும் கட்டுப்பாடுகள் என்று இல்லாமல்.. ஏற்கனவே அங்கு இருக்கும் வெளிநாட்டவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அந்த கனடா மாகாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் தொடக்கம் தான்.. வரும் காலத்தில் மேலும் பல மாகாணங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சரி, கனடா நிறுவனம் எதற்காக இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.. இதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம்.. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.
காரணங்கள்: ஹெல்த்கேர் செலவுகள் அதிகரிப்பதே இதன் முதல் காரணமாகும். அதாவது கனடாவில் உள்ள இந்த பிரின்ஸ் எட்வர்ட் மாகாணத்தின் சட்டப்படி ஒட்டுமொத்தமாக மாகாணத்தில் ஆகும் மருத்துவச் செலவுகள் வரி உள்ளிட்டவை மூலம் மக்களிடம் இருந்தே வசூலிக்கப்படும். வெளிநாட்டவர் அதிகம் வருவதால் அது மருத்துவ கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறதாம்.. மேலும், காத்திருப்பு காலமும் அதிக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அரசின் ஹெல்த்கேர் கீழ் ஆப்ரேஷன் செய்வோர் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பது அங்குள்ள வீடுகளின் விலை மின்னல் வேகத்தில் எகிறக் காரணமாக இருக்கிறது. இதனால் கனடாவில் வசிக்கும் மிடில் கிளாஸ் மக்களால் வீடுகளைச் சொந்தமாக வாங்க முடிவதில்லையாம்.. வாடகையின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதாம்.. இதனால் அங்குள்ள மிடில் கிளாஸ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
எதிர்ப்பு: இவை எல்லாம் சேர்ந்து தான் கனடா மக்களை வெளிநாட்டினருக்கு எதிராகத் திருப்பி உள்ளது. இப்போது சிறிய மாகாணத்தில் தான் கட்டுப்பாடுகள் எடுத்து வரப்பட்டுள்ளது என்ற போதிலும் வரும் காலத்தில் இது அதிகரிக்கலாம் என அங்குள்ள இந்தியர்கள் அஞ்சுகிறார்கள்.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications