சைலெண்டாக "அணு ஆயுதங்களை" அதிகரிக்கும் சீனா.. பதறும் உலக நாடுகள்! அப்போ இந்தியாவின் நிலை என்ன
ஸ்வீடன்: சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத போர் குறித்த அச்சம் அதிகரித்தே வருகிறது. அணு ஆயுத தாக்குதலை ஒரு நாடு ஆரம்பித்தாலும் கூட அது பூமியின் அழிவாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தளவுக்கு அணு ஆயுதங்கள் ஆபத்தானது.
இதனால் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்தும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாமாக முன்வந்து அழிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், எந்தவொரு நாடும் இதைக் கேட்பதாகத் தெரியவில்லை.

அணு ஆயுதங்கள்: சொல்லப் போனால் சில நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பல நாடுகளும் சீனா மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அணு ஆயுதங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே வருகிறதாம்.
இது குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டான் ஸ்மித் கூறுகையில், "சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல ஒரு போக்கு" என்றார். இப்போது சர்வதேச அளவில் 9 நாடுகளிடம் - பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது.
எவ்வளவு: 2022ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 12,710 ஆக அணு ஆயுதங்கள் இருந்தது. இப்போது 2023இல் 12,512 அணு ஆயுதங்கள் மட்டுமே இருக்கிறது.. இதில் 9,576 ஆயுதங்கள் ராணுவ ரீதியாகத் தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. அதேபோல தாக்குதலுக்கு ரெடியாக இருக்கும் கையிருப்பு ஆயுதங்கள் செயலிழக்க வைக்கவுள்ள ஆயுதங்கள் என தனித்தனியாக லிஸ்ட் ரெடி செய்யப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்த ஆயுதங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சீனாவிடம் 350இல் இருந்து 410ஆக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவும் தங்கள் கையிருப்பில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.. அதேபோல ரஷ்யாவின் ஆயுதங்கள் எண்ணிக்கை 4,477இல் இருந்து சற்று உயர்ந்து 4,489ஆக உள்ளது. அதேநேரம் மற்ற நாடுகளில் எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இப்போதும் கூட ரஷ்யா அமெரிக்காவிடம் தான் உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இருக்கிறது.

பிரச்சினை: இருப்பினும், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களைக் குறைக்க முன் வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் ஸ்மித் தெரிவித்தார். உக்ரைன் போர் காரணமாக அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த தூதரக முயற்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக இந்த போர் காரணமாக அணு ஆயுதம் குறித்த ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க ரத்து செய்துள்ளது. அதேபோல அணு ஆயுதங்கள் குறித்த New START ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா விலகியுள்ளது.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும் போது சீனாவிடம் பெரியளவில் ஆயுதங்கள் இல்லை. இருப்பினும், சில ஆண்டுகளாகவே சீனா அதிகளவில் அணு ஆயுதங்கள் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications