For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரொம்ப கொடூரமானது.. விடாதீங்க! எச்சரித்த மக்கள்! ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தந்த நீதிமன்றம்.. ஏன்?

Google Oneindia Tamil News

கேப் டவுன்: இந்த கோர்ட் எத்தனையோ வினோதமான வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால் இப்படி ஒரு வழக்கை சந்தித்தது இல்லை என்ற வசனம் பல படங்களில் இடம்பெற்று இருக்கும். அப்படி ஒரு விசித்திரமான வழக்குதான் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.

தியாகராஜன் இயக்கிய ஆட்டுக்கார அலமேலு படத்தில் வரும் ஆடு பல சாகசங்களை செய்யும். பெரிய கிராபிக்ஸ் இல்லாமல் அப்போதே ஆடு ஆக்சன் செய்வது போல, பல ஸ்டண்ட்களை செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்று சந்தேகிக்கும் அளவிற்கு அந்த ஆக்சன் இருக்கும். தென்னாபிரிக்காவில் இது போன்ற சம்பவம் ஒன்று நிஜமாக நடந்துள்ளது.

 ஆடு

ஆடு

தென்னாபிரிக்காவில் வசிக்கும் அந்த ரூம்பேக் கிழக்கு என்ற பகுதியில் இருக்கும் அடியு சாப்பிங் என்று பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஆடு ஒன்று தாக்கி உள்ளது. சாலையில் நடந்து கொண்டு இருந்த போது, பின்னால் வேகமாக ஓடி வந்த ஆடு அந்த பெண்ணை தாக்கி உள்ளது. அதோடு இல்லாமல் அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை அந்த ஆடு முட்டி உள்ளது.

தாக்கிய ஆடு

தாக்கிய ஆடு

அது செம்மறி வகை ஆடு ஆகும். இதனால் அதன் தலை பகுதி மிகவும் வலுவாக இருக்கும். இதன் தலை பகுதியால் முட்டுவது பெரிய கற்களால் மோதுவதற்கு சமமான பலம் கொண்டு இருக்கும். அந்த பெண்ணை, ஆடு மீண்டும் மீண்டும் மோசமாக தாக்கி உள்ளது. முதலில் தலையில் தாக்கிய ஆடு பின்னர் அந்த பெண்ணின் நெஞ்சில் மாறி மாறி தாக்கி உள்ளது. இதில் அந்த பெண்ணின் மார்பு பகுதியில் மாறி மாறி தாக்கி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது


இதில் அந்த பெண்ணின் நெஞ்சு எலும்புகள் மொத்தமாக முறிந்தன. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த ஆட்டிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டை பிடித்து காவல் நிலையத்தில் கட்டி. வைத்தனர் இது தொடர்பாக வழக்கு அங்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் அந்த ஆட்டின் உரிமையாளர்களும் கலந்து கொண்டார்.

சிறை

சிறை

அந்த பெண்ணை ஆடு அடித்தே கொன்றதை அங்கு இருந்த மக்கள் உறுதி செய்தனர். பலர் அந்த ஆட்டின் கொடூரத்தை வாக்குமூலமாக அளித்தனர். அது ரொம்ப கொடூரமானது.. விட கூடாது என்று வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அந்த ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சூடான் லேக் மாநில ராணுவ சிறையில் அந்த ஆட்டை அடைக்க உத்தரவிடப்பட்டது. 3 ஆண்டுகள் அந்த ஆடு அங்கேயே இருக்கும்.

English summary
Why did a goat jail for three years in military camp at South Africa?இந்த கோர்ட் எத்தனையோ வினோதமான வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால் இப்படி ஒரு வழக்கை சந்தித்தது இல்லை என்ற வசனம் பல படங்களில் இடம்பெற்று இருக்கும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X