டிரம்பின் அடுத்த அடாவடி.. இந்தியாவுக்கு 50% வரியை மெக்சிகோ விதித்ததன் பின்னணி.. அடங்காத அமெரிக்கா
மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மெக்சிகோவின் வரி விதிப்பின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் டிரம்பின் மிரட்டலால் தான் மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்கா உடனானா வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தார்.
அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளையும் இந்தியா மீது வரியை விதிக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் எந்த நாடுகளும் வரியை விதிக்கவில்லை.

இப்படியான சூழலில் தான் தற்போது மெக்சிகோ நம் நாட்டின் மீது திடீரென்று 50 சதவீத வரியை விதித்துள்ளது. மெக்சிகோ சென்ட் சபையில் நடந்த விவாதத்தில் இந்தியா, சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு அதிகபட்சமாக 50% வரை புதிய வரிகளை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், துணிகள் (ஜவுளி), பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். இதன்மூலம் இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு மெக்சிகோவிற்கு கூடுதலாக ரூ.3.76 பில்லியன் டாலர் (ரூ.33,910 கோடி) வருவாய் கிடைக்கும்.
இந்த புதிய வரி விதிப்பு என்பது 2026 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் வர்த்தகத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறுகையில், ‛‛உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சியாக வரி விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும், மெக்சிகோவும் அண்டை நாடுகளாக உள்ளன. இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்கா என்பது மெக்சிகோவின் நெருங்கிய வர்த்தக பங்காளியாகும். USMCA ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படுவதற்கு முன்பு டொனால்ட் டிரம்பை திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவே மெக்சிகோ இந்த வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
USMCA ஒப்பந்தம் என்பது அமெரிக்கா - மெக்சிகோ - கனடா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தமாகும். இதன்மூலம் 3 நாடுகளும் பலனடைந்து வருகின்றன. இதனை மறுஆய்வு செய்வதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இப்போது பிரச்சனை உள்ளது. இதனால் தான் கனடாவுக்கு அதிகப்படியான வரிகளை டிரம்ப் விதித்தார். மெக்சிகோவையும் மிரட்டி வந்தார். மெக்சிகோவின் பல்வேறு பொருட்களுக்கும் வரி போடுவதாக மிரட்டினார்.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக, மெக்சிகோ நாட்டின் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதோடு அமெரிக்க விவசாயிகளுக்கு நீர் வழங்கும் ஒப்பந்தத்தை மெக்சிகோ மீறியதாகவும், இதற்காக 5% வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதனால் தான் டொனால்ட் டிரம்புக்கு பயந்து மெக்சிகோ நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த லிஸ்ட்டில் சீனாவும் உள்ளது. டிரம்ப் ஏற்கனவே இந்தியா, சீனாவை குறிவைத்து வரி விதித்தார். இதனால் அவரது பாணியிலேயே மெக்சிகோவும் வரியை போட்டு அவரை சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மெக்சிகோ எல்லை வழியாக பலரும் அமெரிக்காவுக்கு ஊடுருவி வருகின்றன. இதனை மெக்சிகோ தடுக்க தவறி உள்ளதாக டிரம்ப் கூறி வந்தார். இப்படி தொடர்ந்து மெக்சிகோவை வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை சுட்டிக்காட்டி டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில் அவரை சமாதானம் செய்ய மெக்சிகோவுக்கு வேறு வழியில்லை. இதனால் தான் நம் நாடு உள்பட பிற ஆசிய நாடுகளை குறிவைத்து 50 சதவீத வரியை மெக்சிகோ விதித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications