1800 கோடி கொடுத்து ஒயினை அழிக்கும் பிரான்ஸ்! எங்க கிட்ட தரலாமே.. கதறும் குடிமகன்கள் - என்ன மேட்டர்?
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் ஒயின் உலகெங்கும் புகழ் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.. அதேநேரம் அங்கே திடீரென ஒயினை அழிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு இறங்கியுள்ளது.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொன்று பேமஸாக இருக்கும். அதன்படி பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற ஒன்று என்றால் அது ஒயின் தான். பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒயினுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சில குறிப்பிட்ட வகை ஒயின்கள் ஒரு பட்டிலே கூட பல லட்சம் வரை போகும். ஆனால், இப்போது பிரான்ஸ் நாட்டில் அந்நாட்டு அரசே 200 மில்லியன் யூரோக்கள் செலவழித்து ஒயின்களை அழிக்கிறது. அது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒயின்: பிரான்ஸ் நாட்டில் ஒயின் தொழிற்சாலை மிகவும் புகழ் பெற்றவையாக இருக்கிறது. இருந்த போதிலும் சமீப காலமாகவே அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அங்கே எதிர்கொண்டு வருகிறார்கள்.. அங்கு கிராஃப்ட் வகை பீருக்கான மவுசு அதிகரிப்பதால் ஒயின் தேவை குறைந்து வருகிறது. இதனால் இப்போது அங்குள்ள ஒயின் உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் ஒயின்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இத்துடன் கொரோனா உள்ளிட்ட வேறு பல பிரச்சினைகளும் சேர்ந்துவிட்டன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடுகின்றனர். இதையடுத்து உற்பத்தியாளர்களைக் காக்கும் முயற்சியாக உபரி ஒயினை அழிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 200 மில்லியன் யூரோ அதாவது ரூ. 1,782 கோடி ஒதுக்கியுள்ளது.. போர்டோக்ஸ் மற்றும் லாங்குடாக் உள்ளிட்ட முக்கிய ஒயின் உற்பத்தி செய்யும் பகுதிகள் தேவை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
நஷ்டம்: இது தொடர்பாக லாங்குடாக் ஒயின் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், "நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.. தேவை கடந்த காலங்களை விடப் பயங்கரமாகக் குறைந்துள்ளது. இதனால் விற்பனை விலை உற்பத்தி விலையை விடக் குறைவாக உள்ளது. இதனால் ஒயின் விற்பனையில் எங்களுக்குத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டே வருகிறது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போர் மற்றும் அங்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக அங்கே உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் அத்தியாசம் இல்லாத செலவுகளைக் குறைத்து வருகின்றனர். ஒயின் ஆடம்பர செலவாகப் பார்க்கப்படும் நிலையில், அதையும் பொதுமக்கள் குறைத்துள்ளனர். ஒயின் விலை அதிகரிக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ரூ. 1,782 கோடி: இதனால் ஒயின் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இப்போது பிரான்ஸ் அரசு இந்த ரூ. 1,782 கோடியை ஒதுக்கியுள்ளது.. இந்த பணத்தைக் கொண்டு அவர்கள் சந்தையில் அதிகம் இருக்கும் ஒயினை வாங்கி அழிக்க உள்ளனர். இதன் மூலம் சந்தையில் இருக்கும் ஒயின் அளவு குறையும் என்றும் இதன் மூலம் ஒயின் விலை பாதுகாக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அங்கே ஒயின் விலை சரியும் நிலையில், பிரான்ஸ் அரசு எடுக்கும் நடவடிக்கை ஒயின் தயாரிப்பாளர்களுக்கு இது மிகப் பெரியளவில் உதவும்.. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஐரோப்பிய ஆணையத்தின் தரவுகள்படி இத்தாலியில் 7 சதவீதம் ஒயின் நுகர்வு குறைந்துள்ளது. அதேபோல ஸ்பெயினில் 10 சதவீதமும், பிரான்சில் 15 சதவீதமும் குறைந்துள்ளது. மேலும், ஜெர்மனியில் 22 சதவீதமும், போர்ச்சுகலில் 34 சதவீதமும் ஒயின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் பிரான்ஸ் அரசு எடுத்த இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications