"காத்துவாக்குல மூன்று காதல்!" அழகிய சகோதரிகளை மணந்த இளைஞர்! "எல்லாமே ஷேரிங் தானாம்!" புதுசா இருக்கே
ஒரே இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட மூன்று அழகிகள்..
கென்யா: காதல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது தான். இருப்பினும், இந்த மூன்று சகோதரிகள் தங்கள் காதலை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.. இது இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரே மாதிரி விஷயங்களையே செய்வார்கள். இரட்டையர்கள் மட்டுமின்றி ஒரே பிசரவத்தில் மூன்று பேர் பிறந்திருந்தாலும் கூட அதுவே தான் நடக்கும்.
அவர்களை அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது. மூன்று பேருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால், இந்த சகோதரிகள் இதில் அனைவரையும் தாண்டி சென்றுவிட்டனர் என்றே சொல்லலாம்.

கென்யா
இன்றைய காலகட்டத்தில் ஒரே நபர் பலருடன் உறவில் இருப்பது பல நாடுகளில் வழக்கமான ஒன்றாகி வருகிறது. சில இடங்களில் சகோதரிகளும் கூட ஒரே ஆணுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. அப்படித்தான் கென்யா நாட்டில் மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு இரண்டல்ல மூன்று சகோதரிகள் ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

எப்படி நடந்தது
இதற்கிடையே திருமணத்திற்கு அவர்கள் சொல்லும் காரணமும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கென்யா நாட்டை சேர்ந்த சகோதரிகள் கேட், ஈவ் மற்றும் மேரி.. இவர்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஒன்றாகப் பிறந்த மூன்று சகோதரிகள் ஆவர். இவர்கள் கென்யாவில் இசைத் துறையில் சாதிக்க முயன்று வருகிறார்கள். இதில் மூத்த சகோதரியான கேட் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை சந்தித்து உள்ளனர்.

மூவரும் எனக்குத் தான்
அவர்கள் இருவருக்கும் இடையே பார்த்தவுடன் காதல் வந்துவிட்டது. அவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்துள்ளனர். கொஞ்ச நாள் கழித்து ஸ்டீவோ கேட்டின் சகோதரிகளையும் சந்தித்துள்ளார். இரு சகோதரிகளுடனும் அவர் பேசி உரையாடி வந்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் கூறுகையில், "நான் கேட்டின் சகோதரிகளைச் சந்தித்து உரையாடினேன். கொஞ்ச நேரம் தான் அவர்களுடன் பேசியிருப்பேன்.. எனக்கு அவர்கள் மீது ஒரு வித உணர்வு ஏற்பட்டது. அப்போதுதான் நான் உணர்ந்தேன்.. மூன்று பேரும் எனக்கானவர்கள் என்று.." என்றார்.

திருமணம்
மூன்று சகோதரிகளும் இதற்குப் பச்சைக் கொடி காட்டவே ஜாலியாக கொஞ்சக் காலம் காதலித்துள்ளனர். விரைவிலேயே மூன்று சகோதரிகளையும் அவர் திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தான் இயல்பிலேயே பலதார மணத்தில் நாட்டம் கொண்டவர் என்று கூறும் ஸ்டீவோ, தான் இப்போது மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

கஷ்டமில்லை
மூன்று பெண்களின் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வது கடினமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது குறித்து பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மூன்று பெண்களைத் திருப்திப்படுத்துவது பெரிய விஷயமில்லை" என்று கூறி கண்ணடிக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "நான் ஸ்ட்ரிக்ட்டான ஒரு கால அட்டவணையைப் பின்பற்றுகிறேன்.. அனைத்து பெண்கள் உடனும் போதுமான நேரத்தைச் செலவிடுவதை உறுதி செய்கிறேன்..

இதெல்லாம் ஓவரு
திங்கட்கிழமைகள் மேரிக்கு.. செவ்வாய்க்கிழமைகள் கேட்க்கு.. புதன்கிழமைகள் ஈவ்க்கு.. கூடுதலாக யாராவது வந்தாலும் எனக்கு ஓகே தான். ஆனால், சகோதரிகளுக்கு அதில் விருப்பம் இல்லை.. எனவே, இப்போதைக்கு அவர்கள் மூன்று பேர் மட்டும் தான்" என்று வருத்தத்துடன் கூறுகிறார். ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வதே முடியவில்லை.. இதில் இவருக்கு மூன்று பெண்களா என்ற ரேஞ்சில் நெட்டிசன்கள் புலம்பித் தள்ளி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications