கிறிஸ்தவ நாட்டை வைத்து துருக்கி - அஜர்பைஜானுக்கு ஆப்பு.. ஆயுதங்களை இறக்கும் இந்தியா! மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

யெரெவன்: பாகிஸ்தானுடன் சேர்ந்து நம் நாட்டை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்த 2 நாடுகளுக்கும் பாடம் புகட்ட இந்தியா மாஸ்டர் பிளானை மேற்கொண்டுள்ளது. நம் நாடு அர்மேனியாவுக்கு முக்கிய ஆயுதங்களை அனுப்பும் பணியை தீவிரமாக்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. பினகா, ஆகாஷ், ஹாவிட்சர்ஸ் உள்ளிட்டவை அர்மேனியாவுக்கு சென்று கொண்டிருக்கிறது. துருக்கி, அஜர்பைஜான் இஸ்லாமிய நாடாக உள்ள நிலையில் கிறிஸ்தவ நாடான அர்மேனியா மூலம் குடைச்சல் கொடுக்க நம் நாடு வைத்துள்ள திட்டம் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நம் நாடு ஏவுகணைகளை அனுப்பியது. 9 பயங்கரவாத முகாம், விமானப்படை, ராணுவ தளங்களை நம் நாடு அழித்தது.

why-india-is-boosting-arms-sales-to-armenia-and-how-it-will-affect-turkey-and-azerbhaijan-details

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக நம் நாடு எடுத்து இந்த நடவடிக்கையை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் கண்டித்தன. அதோடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருநாடுகளும் மாறின. துருக்கி ஒரு படி மேலே போய் தனது நாட்டு ட்ரோன் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை வைத்து பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டை தாக்கியது.

துருக்கி - பாகிஸ்தானின் இந்த சதி வேலைகளை நம் படை வீரர்கள் முறியடித்தன. நம் நாட்டுடன் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை கண்டறிந்து வானிலேயே அழித்தது. துருக்கி, அஜர்பைஜானை இப்போது நம் மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இருநாடுகளுடன் வர்த்தகங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அந்த 2 நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதையும் நம் மக்கள் புறக்கணித்துள்ளனர். இது இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதற்கிடையே தான் தற்போது நம் நாடு துருக்கி, அஜர்பைஜான், பாகிஸ்தான் கூட்டணிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி அர்மேனியா நாட்டுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நம் நாடு அதிகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியா செக் வைக்கிறது. இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் அஜர்பைஜான் - அர்மேனியா இடையே பிரச்சனை உள்ளது. அஜர்பைஜான் இஸ்லாமிய நாடு. அங்கு ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர்.

அர்மேனியா கிறிஸ்தவ நாடு. இருநாடுகள் இடையே பலமுறை மோதல், போர் நடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாகோர்னா - கரபாக் பிராந்தியம் யாருக்கு என்பது தொடர்பாக இருநாடுகள் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இதில் துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவு தெரிவித்து வெல்ல வைத்தது. கடந்த 2020ம் ஆண்டில் இந்த போர் முடிவுக்கு வந்தது. அர்மேனியாவில் ஏற்பட்ட ஆயுத பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தி அஜர்பைஜானுக்கு ஆதரவு தெரிவித்து துருக்கி வெல்ல வைத்தது.

இப்படி அஜர்பைஜானுக்கு துருக்கி உதவுவது போல் தற்போது அர்மேனியாவுக்கு இந்தியா உதவி செய்ய தொடங்கி உள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் துருக்கி, அஜர்பைஜானின் மூக்கை உடைக்கலாம். இந்தியா - அர்மேனியா இடையேயான உறவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் பாதுகாப்பு துறையில் இருநாடுகள் இடையே ஆழமான உறவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நம் நட்பு நாடான ரஷ்யா தான். ரஷ்யா தான் அர்மேனியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. ஆனால் ரஷ்யா - அர்மேனியா இடையே விரிசல் ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டில் நாகோர்னா - கரபாக் போரில் அர்மேனியாவுக்கு ரஷ்யா உதவி செய்யாமல் நடுநிலை வகித்தது. இருநாடுகள் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அமைப்பாக (Collective Security Treaty Organization) இருந்தாலும் கூட ரஷ்யா, அர்மேனியாவுக்கு உதவவில்லை.

இதையடுத்து ரஷ்யாவை, அர்மேனியா புறக்கணித்த ரஷ்யாவுக்கு பதில் நம் நாட்டிடம் இருந்து ஆயுத இறக்குமதியை அர்மேனியா செய்து வருகிறது. இப்போது நம் நாடு அர்மேனியாவுக்கு ஆகாஷ் 1எஸ் தரையில் இருந்து வானை நோக்கி பறந்து தாக்கும் ஏவுகணை சிஸ்டத்தை வழங்க முடிவு செய்துள்ளது. 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் இதனை நம் நாடு அர்மேனியாவுக்கு வழங்க உள்ளது. அதேபோல் ஹாவிட்சர் பீரங்கி (Howitzer guns), பினகா ராக்கெட் சிஸ்டம் ஆகியவற்றை வழங்க உள்ளது. இதில் பினகா ராக்கெட் சிஸ்டம் ஒரே நேரத்தில் பல ராக்கெட்டுகளை ஏவி தாக்கும் திறன் கொண்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பரில் முக்கிய ஏவுகணைகள் அர்மேனியாவுக்கு சென்றது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக சேர்ந்து நமக்கு குடைச்சல் கொடுக்கும் துருக்கி, அஜர்பைஜனுக்கு கட்டம் கட்ட அர்மேனியாவுக்கான ஆயுத ஏற்றுமதியை இந்தியா அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கு பிரச்சனையாக மாறும் என்கின்றனர் டிபென்ஸ் வல்லுநர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+