For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏறு தழுவுதல் ஏன்?- அமெரிக்கத் தமிழரின் வரைபட விளக்கம்

By Shankar
Google Oneindia Tamil News

காக்கிஸ்வில் (மேரிலேண்ட், யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் வெறும் ஆதரவு முழக்கங்களோடு இல்லாமல், அங்குள்ள் அடுத்த சந்ததியினருக்கு விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு என்றாலே ஏதோ கிராமத்து விடலைப் பசங்களின் விளையாட்டு என்ற எண்ணம் தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது

Why Jallikkattu? Here is an demo by US Tamil

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால், விவரம் தெரிந்தவர்கள் எடுத்துக் கூறும் போது நிலமையை உணர்ந்து தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பவர்களும் ஏராளம்.

நாட்டின மாட்டு இனப்பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டின் அவசியம் ஏன், A2 ரக பால் வகைகள் என நமது பாரம்பரியம் பற்றி தெரியாத அறியாமை ஒரு நோயாகவே இருந்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் அனைவருக்குமே அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் உருவாக்கி விட்டது.

அமெரிக்காவில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்திலும், ஜல்லிக்கட்டு ஏன் உருவானது, காளைகளின் வலிமை, இனப்பெருக்கம் என தொடர்பான அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறுகிறார்கள்.

மேரிலாண்ட் காக்கிஸ்வில் நகரில் நடந்த போராட்டத்தில் வரைபடத்துடன், ஜல்லிக்கட்டும் நாட்டின மாடுகளின் உயிர் சுழற்சியும் என்ற தலைப்பில் எளிமையான விளக்கம் செய்தார்கள்.

அதை உருவாக்கியவர் அனைவருக்கும் புரியும் வகையில் மூன்றரை நிமிடத்திற்குள் விவரித்துள்ளார். அந்த காணொலியை நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளlலாம்.

ஏறு தழுவுதல் ஏன்?- அமெரிக்கத் தமிழரின் வரைபட விளக்கம்: வீடியோ

English summary
Why Jallikkattu? Why we call it as Yeru Thazhuvuthal? Here is an demo by US Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X