இந்திய காகங்களை குறிவைத்து கொல்லும் நாடு.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க.. இப்படி கூட நடக்குமா
நைரோபி: கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது உலகில் பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் உள்ளன. அவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட நாட்டை பூர்வீகமாகக் கொண்டு இருக்கும். பின்னர் அவை அப்படியே மற்ற நாடுகளுக்கும் பரவும்.

இப்படி தான் உலகில் தோன்றிய எல்லா பறவைகளும் ஒரு பகுதியில் உருவாகி மற்ற நாடுகளுக்குப் பரவும். இந்திய காகங்களும் அப்படி தான். இந்தியாவைப் பூர்வமாகக் கொண்ட இந்த காகங்கள் இப்போது பல நாடுகளில் காணப்படுகிறது.
கென்யா முடிவு: இதற்கிடையே இப்போது கென்யா அரசு இந்திய காகங்களுக்கு எதிராக ஒரு போரையே அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் சுமார் ஒரு கோடி இந்திய காகங்களைக் கொல்ல கென்யா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான திட்டத்தைப் போட்டுள்ள கென்யா அரசு, இதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. சாதாரண காகம் தானே.. அதை அழிக்க ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.. இந்தளவுக்கு பிளான் போட என்ன காரணம் என்ற சந்தேகம் வரலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காகங்களை பொதுவாக இந்திய காகங்கள் என்றே அழைப்பார்கள். பெயர் குறிப்பிடுவதைப் போலவே இது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இவை இப்போது மற்ற நாடுகளுக்குப் பரவி இருக்கும் சூழலில், கென்யாவில் இது மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறி இருக்கிறது. மேலும், கென்யா நாட்டின் எக்கோ சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இந்த காகம் இல்லை என்றும் இந்த காகங்கள் பல தலைமுறைகளாகப் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளூர் பறவைகளுக்கு எதிராகவும் இருப்பதாகக் கென்யா வனவிலங்கு சேவை மையம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்: இது தொடர்பாக அந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கூறுகையில், "காகங்களின் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.. இதனால் பெரிய தலைவலியாக இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொடர்ந்து புகாரளித்து வருகிறார்கள்.. எனவே, காகங்களின் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இந்த காகங்கள் பொது இடங்களை அசுத்தம் செய்கிறதாம். இதுவும் காகத்தைக் கொல்ல முக்கிய காரணமாக இருக்கிறது. என்னப்பா.. எல்லா பறவைகளும் அசுத்தம் செய்கிறது தானே என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இந்திய காகங்களின் எண்ணிக்கையில் அதிகளவில் இருப்பதால் இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதாகக் கென்யா அரசு தெரிவிக்கிறது.
ஆபத்து: மேலும், கென்யா மண்ணை பூர்வீகமாகக் கொண்டுள்ள பறவைகள் ஏற்கனவே ஆபத்தில் உள்ளது. அவற்றை இந்த காகங்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு கொல்கிறதாம். இதுவும் கென்யா அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. மேலும், கென்யா கடற்கரை பகுதியில் இருக்கும் சிறிய உள்நாட்டுப் பறவைகளின் கூடுகளை அழித்து அவற்றின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை வேட்டையாடுவதன் மூலமாகவும் உள்ளூர் பறவை இனங்களை காகங்கள் அழிக்கிறது. இப்படி கென்யா நாட்டின் பல்லுயிர் அமைப்பை மொத்தமாக அழிப்பதாலேயே காகங்களுக்கு எதிரான போரை கென்யா அரசு அறிவித்துள்ளது
அங்குச் சென்றது எப்படி: இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட இந்த காகங்கள் 1940களில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்குச் சென்று இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவை கென்யா மட்டுமின்றி வெப்பமண்டல நாடுகள் முழுக்க ஆக்கிரமித்து உள்ளது. இதன் காகங்கள் மற்ற உள்ளூர் பறவைகளை அழிப்பதாலேயே சமூக ஆர்வலர்களும் கூட இதற்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications