ஆஃப் ஆன டிரான்ஸ்பான்டர்.. மாயமாகும் ரஷ்ய கப்பல்கள்! பின்னணியில் இந்தியாவா? கொதிக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் பல திடீரென காணாமல் போன சம்பவத்தால் அமெரிக்கா கோபம் அடைந்துள்ளது. இதை அமெரிக்கா ரெட் flag என்று விமர்சனம் செய்துள்ளதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் பெரிதாக அந்த நாட்டை பாதிக்கவில்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது.

ரஷ்யா பொருளாதாரம்

ரஷ்யா பொருளாதாரம்

இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கவில்லை. அவர்களின் டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பும் கூட 83 என்ற அளவில் நன்றாகவே (போருக்கு முன் 81) உள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்களை வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை எங்களின் நட்பு நாடுகள் அதிகரிக்க கூடாது என்று அமெரிக்கா கண்டிஷன் போட்டுள்ளது.

எண்ணெய் கப்பல்

எண்ணெய் கப்பல்

இந்த நிலையில்தான் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் திடீர் திடீரென மாயமாவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அதாவது ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் கடல் பகுதிக்கு செல்கிறது. இந்த நிலையில் திடீரென பாதி வழியில் ரஷ்ய கப்பல்களில் இருக்கும் டிரான்பண்டர்கள் அணைக்கப்படுகிறது. பொதுவாக கப்பல்களில் automatic identification systems (AIS) எனப்படும் டிரான்ஸ்பாண்டர்கள் இருக்கும். இதுதான் ஒரு கப்பல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க உதவும்.

டிரான்ஸ்பாண்டர்கள்

டிரான்ஸ்பாண்டர்கள்

இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் ஒரு கப்பல் எங்கே செல்கிறது என்பதை எந்த ஒரு நாடும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். எண்ணெய் கப்பல்கள் கண்டிப்பாக இது போன்ற சிஸ்டத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் கடலில் செல்லும் போது ரஷ்யா பாதி வழியில் இப்படி டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்துகிறது. பின்னர் நீண்ட நேரம் கழித்து மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பி செல்லும் போதே இந்த எண்ணெய் கப்பல்களில் டிரான்ஸ்பாண்டர்கள் இயக்கப்படுகின்றன.

ரஷ்யா எண்ணெய்

ரஷ்யா எண்ணெய்

இதனால் ரஷ்யா கடலில் திருட்டுத்தனமாக யாருக்கோ எண்ணெய் விற்பதாக அமெரிக்கா புகார் அளித்துள்ளது. போருக்கு முன்பு இருந்ததை விட 7 மடங்கு அதிகமாக இப்படி ரஷ்ய கப்பல்கள் தங்களின் எண்ணெய் கப்பல் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்துவதாகவும், இது ஒரு red flag என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யா அமெரிக்காவிற்கு தெரியாமல் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்திவிட்டு, எண்ணெய் கப்பலை கொண்டு சென்று உலக நாடுகளுக்கு விற்கிறதோ என்ற கேள்வியை அமெரிக்கா எழுப்பி உள்ளது.

எண்ணெய் விற்பனை

எண்ணெய் விற்பனை

பொதுவாக எண்ணெய் கப்பல்கள் கண்டிப்பாக இது போன்ற சிஸ்டத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் ரஷ்யா இதை அணைப்பதால் ஏதோ ஒன்றை மறைக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது. . ரஷ்யா இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அதிகமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் போதுதான் இப்படி டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்படுகின்றன என்றும் சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே ரஷ்யா இந்தியாவிற்கும், சீனாவிற்கும் மறைமுகமாக கூடுதல் எண்ணெய்களை விற்பனை செய்கிறதோ என்ற கேள்வியையும் இதனால் அமெரிக்கா எழுப்பி உள்ளது

சிஎன்என் சொல்வது என்ன?

சிஎன்என் சொல்வது என்ன?


இதனால்தான் இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா விமர்சனம் செய்ததோ என்று கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை. இது பொருளாதார தடைக்கு எதிரானது இல்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை துரிதமாக அதிகரிக்க கூடாது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவை சார்ந்து இருக்க கூடாது என்று கூறினார்.

 தலீப் சிங்

தலீப் சிங்

எங்களின் பொருளாதார தடைகளை எதிர்க்கும் விதமாக அல்லது மட்டுப்படுத்தும் விதமாக செயல்படும் நாடுகளை நாங்கள் விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவில் இருந்தது. ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கு எண்ணெய் கொடுக்கும் நிலையில் தலீப் சிங் இப்படி இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். ரஷ்யா ரகசியமாக எண்ணெய் வர்த்தகம் செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்தியாவை அமெரிக்கா விமர்சனம் செய்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+