Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடாவில் குவிந்த சீக்கியர்கள்.. அங்கே ஒட்டுமொத்தமாக மாறிய அரசியல் கிளைமேட்.. இது புதுசா இருக்கே

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: இந்தியா கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கே சீக்கியர்கள் எப்படி வலுவாக உள்ளனர்.. அரசியல் ரீதியாக அவர்கள் செல்வாக்கு என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு கடந்த சில வாரங்களாகவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பை நடத்தி வந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டே இதற்குக் காரணம்.

 Why Sikhs are having major political say in Canada? An Explainer

இந்த ஹர்தீப் சிங் இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாகும். இருப்பினும், கனடாவில் இவர் சுதந்திரமாகவே காலிஸ்தான் அமைப்பை நடத்தி வந்தார். இவரை அடையாளம் தெரியாத சிலர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர்.

கனடா விவகாரம்: இதற்கு இந்தியா தான் காரணம் என்று கனடா குற்றஞ்சாட்டுவதே இதற்குக் காரணம். இருப்பினும், ட்ரூடோ அரசின் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் இது "அபத்தமானது" என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், கனடா நாட்டவருக்கு வழங்கப்படும் விசா சேவையையும் நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களை வெளியிட இந்தியா வலியுறுத்தும் போதிலும், கனடா எந்தவொரு ஆதாரத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டே வரும் நிலையில், கனடாவுக்கும் சீக்கியர்களுக்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மக்கள்தொகை: கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவின் மக்கள் தொகை 3.70 கோடியாக இருக்கிறது. இதில் 16 லட்சம் பேர், அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் நான்கு சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். அதேபோல கனடாவில் இருக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கையும் சுமார் 7,70,000ஆக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கனடாவில் உள்ள சீக்கியர்களின் மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மேற்படிப்பு மற்றும் வேலைக்காகப் பஞ்சாபிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

ஒட்டுமொத்தமாகக் கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் இனக் குழுவாகச் சீக்கியர்கள் உள்ளனர். அங்கே பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையில், அடுத்து முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்குப் பிறகு 4ஆவது பெரிய மதமாகச் சீக்கிய மதம் இருக்கிறது. மேலும், அங்கு ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளுக்குப் பிறகு அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடத்தில் பஞ்சாபி இருக்கிறது.

எங்கே உள்ளனர்: அவர்களின் மக்கள்தொகை கனடாவின் முக்கிய பகுதிகளான ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டாவில் குவிந்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் இந்த பிரிட்டஷ் கொலம்பியா பகுதியில் வைத்துத் தான் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இப்போது கட்டுமானம், போக்குவரத்தும், வங்கி ஆகிய துறைகளில் சீக்கியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. மேலும், கனடாவில் பல சீக்கியர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

 Why Sikhs are having major political say in Canada? An Explainer

அரசியல்: இவை தவிர அங்கே நிரந்தரமாகத் தங்க பிஆர் எனப்படும் Permanent Residence உரிமத்தைப் பெற்றும் 4.15 லட்சம் சீக்கியர்கள் அங்கே வசிக்கிறார்கள். மேலும், பல்வேறு விசாக்களில் அங்கே 1.19 லட்சம் சீக்கியர்கள் வசித்து வருகிறார்கள். 1980 வரை, கனடாவில் வெறும் 35,000 சீக்கியர்கள் மட்டுமே பிஆர் உடன் வசித்து வந்தனர். அதன் பிறகே இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி சீக்கியர்கள் மக்கள் தொகை அதிகரிப்பது அங்கே அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கிறது. இதன் காரணமாகவே ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாகக் கடந்த 2015இல் பிரதமரானபோது, அவரது அமைச்சரவையில் சீக்கிய சமூகத்தில் இருந்து 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

எப்படி: கனடா சமூகத்தில் சீக்கியர்கள் பவர்புல்லாக மாற அங்குள்ள குருத்வாராக்கள் மூலம் அவர்கள் செய்யும் நெட்வொர்க்கிங் ஒரு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிய நிதி என்று நிதி சேகரிக்கும் அவர்கள், அதைச் சீக்கியர்களின் கல்வி உள்ளிட்ட நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். மேலும், தேர்தல் நிதிக்கும் இதில் இருந்து கணிசமான தொகையைச் செலவு செய்கிறார்கள்.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 388 எம்பிக்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 18 பேர் சீக்கியர்கள் ஆகும். மேலும், தொகுதி வாரியாக பார்க்கும் போது அங்கே எட்டு இடங்கள் முழுக்க முழுக்க சீக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது தவிர மேலும் 15 இடங்களில் அவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. அரசியல் ரீதியாக இந்தளவுக்கு வலுவாக இருப்பதன் காரணமாகவே கனடாவில் எந்தவொரு அரசியல் கட்சியும் சீக்கியர்களை பகைத்துக் கொள்ள ரெடியாக இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+