ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே
தெஹ்ரான்: வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் அங்குப் போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே ஒட்டுமொத்த ஹார்முஸும் ரத்த நிறத்தில் மாறிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக ஹார்முஸ் முழுக்க ரத்த ஆறு ஓடுவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த 'சிவப்பு நிறக் கடல்' வீடியோ நெட்டிசன்களை ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா - ஈரான் மோதல் உச்சக்கட்டத்தில் இருப்பதால், இது போரினால் ஏற்பட்ட ரத்த ஆறோ எனப் பலரும் அச்சமடைந்துள்ளனர். ஆனால், உண்மை வேறு விதமானது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

ஹார்முஸ்
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வந்தது. இப்போது தான் சில நாட்களாகத் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கூட எப்போது வேண்டும் என்றாலும் முறிந்து போகலாம் என்ற சூழலே நிலவுகிறது. அமெரிக்கா அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றி வரும் நிலையில், ஈரான் தனது கடல் எல்லைகளைக் காக்க ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் அங்குப் பதற்றம் தொடர்ந்தே வருகிறது.
The scene in Hormuz Island, off Iran's coast, following heavy rainfall earlier today. pic.twitter.com/Wu6zxDUIkm
— Joe Truzman (@JoeTruzman) December 16, 2025
சிவப்பு
இந்தச் சூழலில், ஹார்முஸில் கடற்கரை ரத்தச் சிவப்பாக மாறியிருக்கும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. கடல் முழுக்க ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போரினால் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதோ எனப் பலரும் அஞ்சி வருகிறார்கள். ஆனால், உண்மையில் இது இப்போது போரினால் ஏற்பட்ட ரத்தம் அல்ல. சொல்லப்போனால் இது கடந்த டிசம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.. பல காலங்களாக ஹார்முஸ் தீவில் மழைக்காலங்களில் நிகழும் ஒரு வியக்கத்தக்க இயற்கை நிகழ்வு தான் இது!
கடல் ஏன் சிவப்பாக மாறியது?
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, அதன் விசித்திரமான புவியியல் அமைப்புக்கு உலகப்புகழ் பெற்றது. இந்த தீவின் மண்ணில் ஹேமடைட் எனப்படும் இரும்பு ஆக்சைடு தாது மிக அதிக அளவில் உள்ளது. அதாவது செவ்வாய்க் கிரகத்தில் உள்ள அதே தனிமம் இங்கும் இருப்பதால், இந்தத் தீவை "பாரசீக வளைகுடாவின் வானவில் தீவு" என்றும் அழைக்கிறார்கள்.
காரணம்
தீவில் பலத்த மழை பெய்யும்போது, அங்கிருக்கும் இரும்புச் சத்து நிறைந்த குன்றுகளில் இருந்து மழைநீர் அடித்து வரப்படுகிறது. இந்த நீர் கடற்கரை மணலிலும், ஆழமற்ற கடல் நீரிலும் கலக்கும்போது, அந்தப் பகுதியே ரத்தம் தோய்ந்தது போல அடர் சிவப்பு நிறமாக மாறுகிறது. மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக, இந்த இரும்புத் தாதுகள் கடல் நீரில் கரைந்து ஒரு ரத்த நிற நதி போன்ற காட்சியை உருவாக்குகிறது.
இங்குள்ள மண் வெறும் அழகுக்காக மட்டுமல்ல.. உள்ளூர் மக்கள் இந்த இரும்பு ஆக்சைடைப் பிரித்தெடுத்து, வணிக ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எரிமலைப் பாறைகள் மற்றும் உப்பு படிமங்கள் நிறைந்த இந்தத் தீவு, புவியியல் ரீதியாக ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. வளைகுடாவில் இப்போது நடக்கும் 'யுத்தக் கண்ணிவெடி'களை விட, இயற்கையின் இந்த ஆச்சரிய நிகழ்வு தான் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. போர் ஒருபுறம் இருந்தாலும், ஹார்முஸின் இந்த 'சிவப்பு அழகு' என்றுமே ஒரு ஆச்சரியம்தான்!
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!












Click it and Unblock the Notifications