உலக அழிவின் அறிகுறியா? 2012 படம் போல.. அப்படியே அட்டை கருப்பாக மாறிய நியூயார்க்.. என்ன காரணம்?
நியூயார்க்: நியூயார்க் நகரம் முழுக்க அப்படியே காற்று கருப்பாக மாறி.. மக்கள் மூச்சு விட முடியாமல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கின்றனர்.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
On Wednesday, New York City recorded the worst air pollution of any major city in the world. What once seemed unprecedented is becoming familiar, @carolynkor writes: https://t.co/IP6V86I3ZH pic.twitter.com/ffxu0isfG9
— The New Yorker (@NewYorker) June 8, 2023
ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.
கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

கனடா புகை; இந்த நிலையில்தான் கடந்த 2 நாட்களாக கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுப்பாடற்ற காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. கனடாவின் பல்வேறு காட்டுப்பகுதிகளில், அமெரிக்காவின் எல்லை பகுதிகளில் இந்த காட்டு தீ ஏற்பட்டு உள்ளது.
கனடாவின் மேற்கு மாகாணங்களில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான் ஆனால் இந்த ஆண்டு காட்டுத் தீ எதிர்பார்க்காத அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இதுவரை அங்கு ஏற்பட்ட காட்டு தீக்களில் இது மோசமானதாக பார்க்கப்படுகிறது. இந்த காட்டு தீ காரணமாக சுமார் 3.8 மில்லியன் ஹெக்டேர் (9.4 மில்லியன் ஏக்கர்) ஏற்கனவே எரிந்துவிட்டன.
இது 10 ஆண்டு சராசரியை விட 15 மடங்கு அதிகம் என்று அந்நாட்டு பேரிடர் மீட்பு மற்றும் அவசரகால தயார்நிலை அமைச்சர் பில் பிளேயர் கூறி உள்ளார். 414 காட்டுத்தீகள் அங்கே தற்போது ஏற்பட்டு உள்ளன. அவற்றில் 239 காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி உள்ளது.
இந்த காட்டு தீ காரணமாக ஏற்பட்ட புகை அப்படியே அருகில் இருக்கும் அமெரிக்க நகரங்களை போர்வை போல மூடி உள்ளது. இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காட்டு தீயை சமாளிக்க உதவி கோரினார். இதையடுத்து நூற்றுக்கணக்கான அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே கனடாவிற்கு வந்துள்ளனர்.
மேலும் பலர் கனடாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிழக்கு கடற்கரை பகுதிகள் முழுக்க, அங்கே இருக்கும் நகரங்கள் முழுக்க இந்த காட்டு தீ காரணமாக புகை மண்டலங்களாக மாறி உள்ளது. முக்கியமாக நியூயார்க் நகரம் பேரழிவிற்கு பின் காட்சி அளிக்கும் நகரம் போல கருப்பாக காட்சி அளிக்கிறது.
For the second straight day, New York City was ranked the worst city in the world for air quality, as hazardous smoke and particles continue to flow south from wildfires in eastern Canada pic.twitter.com/KTKvUqQVax
— NowThis (@nowthisnews) June 9, 2023
இந்த புகை காரணமாக அமெரிக்க கிழக்கு கடற்கரை முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. விமான போக்குவரத்து குறைந்துள்ளது. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். அங்கே காற்றின் தரம் மிக மோசமான உள்ளதாக 160 காற்று சோதனை மானிட்டர்கள் தெரிவித்துள்ளன.
நியூயார்க்கில் இருந்து வெளியாகி இருக்கும் காற்று படர்ந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. அங்கே காற்று மாசு 342 என்ற மோசமான புள்ளியை தொட்டு உள்ளது. அங்கே இருக்கும் காற்றின் தரத்திற்கு 24 மணி நேரம் வெளியே இருப்பது என்பது 6 சிக்ரெட்டை ஒரு நாள் குடிப்பதற்கு சமம் ஆகும்.
உலக அழிவை காட்டும் 2012 படம் போல அங்கே நியூயார்க் நகரம் காட்சி அளிக்கிறது. கிழக்கு கனடாவில் ஏற்பட்டு உள்ள காட்டுத் தீயில் இருந்து அபாயகரமான புகை மற்றும் துகள்கள் தெற்கே தொடர்ந்து நகர்வதால் நியூயார்க் மூச்சு விட முடியாமல் திணறி வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகின் மிக மோசமான காற்றின் தரம் கொண்ட நகரமாக நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications