சீனாவில் பயிலும் இந்திய மாணவி பகிர்ந்த வீடியோ.. ஹாஸ்டல் ரூம் இப்படியா இருக்கு.. கிறங்கி போன நெட்டிசன்கள்
பீஜிங்: சீனாவில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில் போட்ட வீடியோ ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவில் தனது ஹாஸ்டல் டூர் வீடியோவை போட்டுள்ளார். இந்த வீடியோ தான் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சுமார் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், தனது ஹாஸ்டல் அறையில் என்ன மாதிரியான அம்சங்கள் உள்ளன என்பதை காட்டியிருந்தார். நமது ஊர் ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல இந்த கல்லூரி விடுதி உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
சர்வதேச அளவில் தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து உள்கட்டமைப்பு என சகல துறைகளிலும் பிரமிக்க வைக்கும் வகையில் சீனா வளர்ச்சி கண்டு வருகிறது. ஆசியாவில் சீனாவுக்கு இணையாக வளரும் ஒரே நாடு இந்தியாதான் என்றாலும் கூட, சீனாவில் பல துறைகளில் அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது என்றால் மிகையல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய மாணவியின் வீடியோ
அவ்வப்போது, இணையத்தில் இன்ஸ்டாகிராமில் சீனாவில் உள்ள டெக் அம்சங்களை பார்த்து அந்த நாடு 2050ல் வாழ்கிறது என்றும் நெட்டிசன்கள் பலரும் பதிவிடும் வீடியோக்களை பார்த்து இருக்கிறோம். சமீபத்தில் கூட சீனாவுக்கு தொழில் கருத்தரங்கு தொடர்பாக சென்ற இந்திய தொழிலதிபர் ஒருவர் 800 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை ஒரே பகலில் முடித்துவிட்டு இரவு தூங்குவதற்கு அறைக்கே திரும்பி விட்டதாக வியப்புடன் பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் தற்போது சீனாவில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில், தனது ஹாஸ்டல் டூர் வீடியோவை போட்டுள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சுமார் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் தனது ஹாஸ்டல் அறையில் என்ன மாதிரியான அம்சங்கள் உள்ளன என்பதை வீடியோ மூலம் சலோனி சவுத்ரி காட்டியிருந்தார்.
வியந்து போன நெட்டிசன்கள்
அதாவது ஹாஸ்டல் அறைக்கு செல்வதற்கே முக அடையாளத்தை வைத்து எண்ட்ரி பகுதி ஓபன் ஆகும் சிஸ்டம் உள்ளது. அதுபோக ஹாஸ்டல் அறையின் அமைப்பும் ஒரு நட்சத்திர விடுதியில் எந்த அளவுக்கு வசதி இருக்குமோ அதே அளவுக்கு வசதி இருப்பது போல காட்சியளிக்கிறது. துணி துவைப்பதற்காக தனியாக டார்மெண்ட்ரி இடங்கள், அந்த பகுதிக்கும் செல்ல வேண்டும் என்றால் கூட தங்கள் ஐடி கார்டை ஸ்கேன் செய்த பிறகே செல்ல முடியும் என அனைத்தும் ஹைடெக் ஆக காட்சியளிக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வியந்து பதிவிட்டு வருகிறார்கள். நமது ஊர் ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல இந்த கல்லூரி விடுதி உள்ளது என ஒரு நெட்டிசன் பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன், இங்குள்ள ஹாஸ்டல் விடுதியையும் சீனாவில் அந்த மாணவி பகிர்ந்த விடுதியையும் ஒப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
ஒரு வீடியோவை வைத்து சொல்ல முடியாது
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இதே அளவிலான தரத்திலும் இந்தியாவில் சில பெரிய கல்வி நிறுவனங்களின் ஹாஸ்டல் விடுதிகள் உள்ளன. சீனாவிலும் தரம் குறைந்த ஹாஸ்டல் விடுதிகள் இருக்கலாம்.. இந்த வீடியோவை வைத்து மொத்த சீனாவையும் எடை போட முடியாது என்று பதிவிட்டுள்ளார். இப்படியாக நெட்டிசன்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக இந்திய மாணவி பகிர்ந்த சீனா ஹாஸ்டல் விடுதி அதிகம் பரவி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த சலோனி சவுதிரி , சீனாவில் பொறியியல் படித்து வருவதாக அவரே தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். ஸ்காலர்ஷிப்பில் அங்கு படித்து வருவதாகவும், தான் படிக்கும் பல்கலைக்கழகம் சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
-
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications