Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மம்மி"க்கு வலி.. அவஸ்தையில் வாய்விட்டு அழுகை..உடம்பெல்லாம் இளநீர் தூபம்..வெளிவந்த எகிப்திய சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

எகிப்து எகிப்திய "மம்மி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அத்துடன் மம்மி வலியால் கதறிய காரணமும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது...

உலகிலேயே பழமையும் பெருமையும் வாய்ந்தது எகிப்திய நாகரீகம்.. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டின் பெயரை கேட்டதுமே நமக்கு நினைவுக்கு வருவது அதன் பிரம்மாண்ட "பிரமிடுகள்" தான்.

Egypt mummy agony

அதிசயம்: உலக அதிசயங்களில் ஒன்றான இந்த பிரமிடுகளில் பல பண்டைய எகிப்து மன்னர்களில் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம், மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதாக அந்தகால மக்கள் ஆழமாக நம்பியிருக்கிறார்கள்.. அதனால்தான், உயிரிழக்கும் மன்னர்களின் சடலங்கள் மட்டுமல்லாது, அவர்களது உடைகள், நகைகள், உணவுகள் என எல்லாம் சேர்ந்து இந்த பிரமிடுகளில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

பல நூற்றாண்டு பல காலமானாலும் இந்த சாடலங்கள் சேதமடையாமல் இருக்கும் வகையில் அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி வைக்கப்படும் உடல்களுக்கு "மம்மி" என்று பெயர்..

இந்த பிரமிடுகளில் பல்வேறு ரகசியங்கள் புதைந்து உள்ளதாக கூறப்படுகிறது.. அதனால்தான் இதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடியே இருக்கின்றன.

பூனைகள்: அதன்படி, எகிப்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விலங்கு மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் பல பூனைகள் ஆகும்..

சமீபத்தில் கூட, எகிப்தின் கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸ் என்ற பகுதியில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.. அதாவது, 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்போது எங்கு விட்டுச் சென்றார்களோ அதே இடத்தில் அப்படியே இருந்ததாம் அந்த மம்மி..

Egypt mummy agony

வலி அலறல்: இப்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது எகிப்தின் லக்சர் அருகே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1935ம் ஆண்டின் ஒரு பழங்கால மம்மியை கண்டுபிடித்தனர்.. இந்த மம்மியை பார்க்கும்போது, வலியால் அலறுவது போலவே இருந்தது.. மம்மியின் வாய் திறந்திருந்ததாம்.. பார்ப்பதற்கு மம்மி கத்துவது போலவே இருந்திருக்கிறது.. அதனால் உடனே இதை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்துள்ளனர்..

இப்போது, இறந்த அந்த பெண்ணின் இடுப்பு மூட்டு வைத்து , இந்த பெண்ணின் வயதை 48 என்று கண்டுபிடித்துள்ளனர்.. 3500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான மம்மி இதுவாகும்...

இளநீர்: கெய்ரோ பல்கலைக்கழகத்தின் கஸ்ர் அல் ஐனி மருத்துவமனையின் கதிரியக்கவியல் பேராசிரியரும், ஆய்வின் ஆசிரியருமான சஹர் சலீம் இந்தமம்மி பற்றி சொல்லும்போது, "அந்த மம்மியின் உடலில் தூபம் மற்றும் இளநீர் பிசின் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைத்து பூசப்பட்டிருக்கிறது.. இந்த பொருட்களை வெகு தொலைவில் இருந்து தருவிக்கப்பட்டு சடலத்துக்கு பூசியிருக்கலாம்.. அதனால் இறந்துபோன பெண் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர் என தெரிகிறது.

இந்த பெண்ணின் மரணத்திற்கு பிறகும் அவரது உடலில் விலையுயர்ந்த பிளாஸ்டர்கள் போடப்பட்டுள்ளன.. இந்த மம்மியின் ​​உடலில் எந்தவிதமான கீறலும் காணப்படவில்லை.. பெண்ணின் உள் உறுப்புகளும் அகற்றப்படவில்லை..

பெரும்பாலும் " மம்மிஃபிகேஷன்" முறையில், இதயத்தை தவிர அனைத்து உடல் உறுப்புகளும் அகற்றப்படும்.. ஆனால் இந்த பெண்ணுக்கு மூளை , உதரவிதானம் , இதயம் , நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள் மற்றும் குடல்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.. முதுகுத்தண்டில் மட்டும் லேசான கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது" என்கிறார்.

இந்த தகவல் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+