எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்?
ரியோ: பிரேசிலில் டெலிகிராம் இணையவழி மெசேஜிங் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விலக்கிக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது.
வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட டெலிகிராம் மெசஞ்சர் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பை விட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், சேனல், அதிக குழு உறுப்பினர்களை சேர்க்கும் வசதிகளை கொண்ட டெலிகிராமில் தனிநபர் விபரங்களை மறைத்தும் தகவல்களை பகிரலாம். இந்தியாவில் புதிதாக வெளியான திரைப்படங்களை டெலிகிராம் சேனல்கள் வாயிலாக பகிர்ந்து பலர் பார்த்து வருகின்றனர்.

பிரேசிலில் என்ன பிரச்சனை?
வரும் அக்டோபர் மாதம் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மறுதேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்களால் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிந்த அதிபர் ஜெயிர் பொல்சனாரோ டெலிகிராம் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தார். அமேசான் காடுகளில் பரவிய காட்டுத்தீ, கொரோனா பரவல், தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளால் தனது செல்வாக்கு சரிந்திருப்பதை அறிந்த பொல்சனாரோ டெலிகிராமில் தவறான தகவல்களை பகிர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அரசியல் களமான டெலிகிராம்
இதன் மூலம் டெலிகிராம் செயலியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை பெற்றார் பொல்சனாரோ. அதேபோல் அவரது பெயரில் ஏராளமான குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பகிரப்படும் தவறான தகவல்கள் குறித்து டெலிகிராம் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்தன. இருப்பினும் டெலிகிராம் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரேசில் நீதிபதி அறிவுறுத்தல்
இதுகுறித்து எழுந்த புகார்களை அடுத்து நாடு முழுவதும் தவறான தகவல்கள் பரவும் களமாக டெலிகிராம் செயலி இருப்பதாகவும், இதனை டெலிகிராம் நிறுவனம் உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலக்சாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார். இது குறித்து டெலிகிராம் செயலி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

டெலிகிராமுக்கு தடை விதித்த பிரேசில் உச்சநீதிமன்றம்
இதனால் டெலிகிராம் செயலி பிரேசிலின் சட்டத்தை அவமதித்துவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை எனவும் கூறி தடை விதித்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம். இதுகுறித்து நீதிபதி அலக்சாண்ட்ரே டி மோரேஸ் தெரிவிக்கையில், "டெலிகிராம் செயலி சட்டத்தின் ஆட்சிக்கு பொருந்தாது என்றும், காவல்துறை, தேர்தல் தீர்ப்பாயங்களின் உத்தரவுகளையும் மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டியது.

பல்டி அடித்த பொல்சனாரோ
டெலிகிராம் செயலி மூலம் அரசியலுக்காக பொய் செய்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ இந்த தடைக்கு வரவேற்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில், "உண்மையை பகிர்ந்துகொள்ளுங்கள், அதை நாங்கள் வரவேற்கிறோம்" எனக்குறிப்பிட்டு இருக்கிறார்.

2 நாட்களில் தடை வாபஸ்
பிரேசில் உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவு உண்மையா பொய்யா என்பது குறித்து ஆய்வு செய்வதற்குள் தடை விதிக்கப்பட்டு விட்டதாக டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து டெலிகிராம் மீதான தடையை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications