லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவும் காட்டுத் தீ.. ஊரை காலி செய்யும் மக்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இருக்கும் சாண்டா பவுலா நகரத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இருக்கும் சாண்டா பவுலா நகரத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீ மொத்த நகரத்தையே தீக்கு இரையாக்கி உள்ளது.
இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் அனைவரும் வீட்டை காலி செய்து கொண்டு இருக்கின்றனர். அங்கு மோசமான புகை நிலவுவதால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் மீட்புப் பணியிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருக்கின்றது.

லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தற்போது காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ காரணமாக அங்கு இருக்கும் சாண்டா பவுலா நகரம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை ஆரம்பித்த தீ இன்னும் விடாமல் பரவிக் கொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அமெரிக்கவின் கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரவும் காட்டுத் தீ
தற்போது இந்த தீ உருவான இடத்தில் இருந்து வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 70 மீட்டர் தூரம் இந்த தீ பரவுகிறது. முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்குள் வராமல் இருந்த இந்த தீ தற்போது 115 கிலோ மீட்டர் தூரம் வரை நகரத்திற்குள் வந்து இருக்கிறது.

இப்போது எப்படி
தற்போது இந்த இரண்டு நாளில் மொத்தமாக 5000 ஏக்கர் காட்டுப்பகுதிகளை தீ சூறையாடி இருக்கிறது. தற்போது இதற்கு தாமஸ் தீ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று தொடக்கத்தில் காட்டுப் பகுதியில் உருவான இது சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் உள்ளேயும் பரவி வருகிறது.

வெளியேறும் மக்கள்
இந்த நிலையில் இந்த தீ காரணமாக அங்கு இருக்கும் சில பள்ளிகள் எரிந்து சாம்பலாகி இருக்கிறது. 500 க்கும் அதிகமான வீடுகள் முழுவதுமாக எரிந்துள்ளது. இதுவரை 5000 மக்கள் ஊரை காலி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வழியாக செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications