பியான்ஸ் வதந்தி... 'கிளிண்டன் நம்பர் 2' ஆகிறாரா ஒபாமா...?
வாஷிங்டன்: பிரான்ஸைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், பாடகி பியான்ஸுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது அமெரிக்காவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் இப்படித்தான் பெண் விவகாரத்தில் சிக்கி பெரும் அவமரியாதைக்குள்ளானார். அதேபோல ஒபாமா விவகாரத்திலும் நடந்து விடுமோ என்ற விவாதம்தான் அது.
இந்த செய்தி இதுவரை வதந்தியாகவே உள்ளது. இருப்பினும் ஒரு வேளை உண்மையாக இருந்து விட்டால் அதை எப்படி ஒபாமா சமாளிப்பார் என்ற கேள்விகள் அமெரிக்கர்கள் மத்தியில் இப்போதே கிளம்பி விட்டதாம்.

சத்தியம் பண்ணிச் சொல்றாருப்பா....
பிரெஞ்சுப் புகைப்படக் கலைஞரான ரோஸ்டிம் தான், பியான்ஸுக்கும், ஒபாமாவுக்கும் இடையே நெருக்கம் இருப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கம் இருக்கிறது என்று அவர் அடித்துக் கூறியுள்ளார்.

நாங்க நியூஸ் போட மாட்டோம்....
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட்டுக்கும் செய்தி கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் செய்தி போட மாட்டோம் என்று அது கூறி விட்டது.

காதலுக்கு கண்ணில்லையே....
ஒபாமாவுக்கும், பியான்ஸுக்கும் இடையே பெரும் வயது வித்தியாசம் உள்ளது. அதாவது 20 வருட வித்தியாசம் உள்ளது. ஒபாமாவுக்கு 52 வயதாகிறது. பியான்ஸுக்கோ 32 தான் ஆகிறது. ஆனால் காதலுக்குத்தான் வயது வித்தியாசம் கிடையாதே...

கிளிண்டன் விவகாரம்....
முன்பு இப்படித்தான் தன்னை விட மிகவும் இளம் வயதான மோனிகா லெவின்ஸ்கியுடன் காதல் கொண்டு விழுந்தார் கிளிண்டன். முதலில் அதை மறுத்தார். பின்னர் ஆம் உண்மைதான் என்று ஒத்துக் கொண்டார்.

இம்பீச்மெண்ட் தீர்மானம்....
கிளிண்டன், மோனிகா இடையே உடல் ரீதியான உறவும் இருந்தது பின்னர் நிரூபணமானது. இதையடுத்து கிளிண்டன் மீது இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெரும் பரபரப்புக்கு மத்தியில் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மறப்போம்... மன்னிப்போம்
இது கிளிண்டனுக்குப் பெரும் சரிவையும், பாதிப்பையும் கொடுத்தது. இருப்பினும் தனது மனைவி, குடும்பத்தாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் கிளிண்டன். பிரச்சினை அத்தோடு முடிந்தது. இன்று வரை கிளிண்டன் தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாகவே வாழ்ந்தும் வருகிறார்.

என் புருஷன் தான், எனக்குமட்டும் தான்....
ஆனால் பியான்ஸ் விவகாரம் உண்மையாக இருந்து விட்டால் ஒபாமாவின் மனைவி மிஷல் அப்படி இருப்பாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா இரங்கல் நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது தனது அருகில் இருந்த பெண் தலைவருடன் ஒபாமா சிரித்துப் பேசியும், செல்போனில் புகைப்படம் எடுத்தும் ஜாலியாக இருந்ததைப் பார்த்து முகம் சுளித்து இருக்கையை மாற்றி ஒபாமாவுக்கு டென்ஷனைக் கொடுத்தவர் மிஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்றல் புயலாகிவிடும் அபாயம்....
எனவே பியான்ஸ் விவகாரம் உண்மையாக இருக்குமானால் முதலில் கொதித்துக் கிளம்புவது மிஷலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications