தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் மகள் விண்வெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டம்?
பிளாகெத்: சர் ரிச்சர்ட் பிரான்சன் பல்வேறு வகைகளில் புகழ் பெற்றவர். விர்ஜின் குரூப்ஸின் 400 நிறுவனங்களுக்கு தலைவர்.
ஒரு தொழிலதிபராக, ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் என்பவராக, ஒரு சாகச வீரராக அவரை எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், கூடிய சீக்கிரமே ரிச்சர்ட் ஒரு தாத்தா ஆகப் போகின்றார் என்பதுதான் தற்போதைய புதிய விஷயம்.

இரட்டையருக்கு தாத்தா:
ரிச்சர்ட்டின் மூத்த மகளான ஹோலிதான் அவருக்கு இந்த அங்கீகாரத்தை நேற்று அளித்துள்ளார். அதுவும் ஒரே நேரத்தில் ஹோலியின் வயிற்றில் வளரும் இரட்டையருக்கு தாத்தா ஆக பிரமோஷன் ஆகிறார் ரிச்சர்ட்.

மகிழ்ச்சியில் ஹோலி:
"ஃப்ரெட்டியும் நானும் இதற்காகத்தான் மகிழ்ச்சியாக காத்திருந்தோம்" என்று ஹோலி கூறியுள்ளார். இவரும், ஃப்ரெட்டி ஆண்ட்ரோஸும் கடந்த 2011இல் திருமணம் செய்து கொண்டனர்.

தாத்தா ரிச்சர்ட்டின் சந்தோஷம்:
64 வயதாகும் ரிச்சர்ட் தாத்தாவாகப் போகும் அந்த நாட்களை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். "என்னால் பொறுமை காக்க முடியவில்லை - விரைவில் அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்க வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி பயணம்:
ஆனால் தற்போது இதில் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது, ஹோலி, தனது தந்தையுடன் விர்ஜின் கேலக்டிக்கின் முதல் விண்வெளி ஓடத்தில் இந்த வருடத்தின் கடைசியில் பறக்க இருக்கிறார். எனவே 32 வயதான ஹோலியின் இந்த கர்ப்பம் அவருடைய விண்வெளிப் பயணத்தை தடுக்குமா என்பது தெரியவில்லை.

முதல் விண்வெளி பிரசவம்?
எனினும், அவர் அதையும் தாண்டி இந்த பயணத்தை மேற்கொண்டார் என்றால் அவர்தான் விண்வெளியில் குழந்தை பெற்ற உலகின் முதல் பெண்மணி என்ற புகழைப் பெறுவார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications