பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம்: மிரட்டும் தாலிபான் தலைவர்
இஸ்லாமாபாத்: பெஷாவரை விட மோசமான தாக்குதல் நடத்துவோம் என்று தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீ் இ தாலிபான் தீவிரவாதிகள் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை தாக்கியதில் 140 பேர் பலியாகினர். இந்நிலையில் தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா பேசிய வீடியோ தெஹ்ரீக் இ தாலிபானின் மீடியாவான உமர் மீடியா மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

12 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பஸ்லுல்லா கூறியிருப்பதாவது,
பெஷாவர் பள்ளி மாணவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து சிறையில் உள்ள தாலிபான்களை ஒப்படைத்தால் அவர்களை திருப்பி அனுப்புவோம் என்று கூறலாம் என இருந்தோம். ஆனால் ராணுவம் தாக்கியதால் தான் மாணவர்களை கொலை செய்தோம். நாங்கள் கொன்றவர்கள் ராணுவத்தாரின் பிள்ளைகள். உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வளர்ந்து ராணுவத்தில் சேர்ந்து எங்களுக்கு எதிராக போராடுவார்கள்.
சிறையில் இருக்கும் எங்கள் ஆட்களை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று அரசை எச்சரிக்கிறேன். இது ராணுவத்திற்கும், எங்களுக்கும் இடையேயான போர். நீங்கள் எங்கள் ஆட்களை கொன்றால் நாங்கள் உங்கள் ஆட்களை கொலை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
பெஷார் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பஸ்லுல்லா கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ உண்மை எனில் பஸ்லுல்லா உயிரோடு தான் இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications