2016ல் உலகை அழிக்கும் அணு ஆயுதப் போர் நடக்கும்: பார்வையற்ற பெண்ணின் கணிப்பு உண்மையாகுமா?
சோபியா: 2004ம் ஆண்டில் சுனாமி ஏற்படும் என்று கணித்த பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான வாஞ்செலியா பான்டேவா டிமிட்ரோவா 2016ம் ஆண்டில் அணு ஆயுத போர் நடக்கும் என்று கணித்தது நடக்குமா என் கேள்வி எழுந்துள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்தவர் வாஞ்செலியா பான்டேவா டிமிட்ரோவா. பாபா வாங்கா என்றும் அழைக்கப்பட்ட அவர் 1996ம் ஆண்டு தனது 85வது வயதில் மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருக்கையில் நூற்றுக்கணக்கான விஷயங்களை கணித்து கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போர், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்படும், 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் 1989ம் ஆண்டே கணித்துக் கூறினார்.
அவர் கூறியது போன்றே இரண்டாம் உலகப் போர், சுனாமி, இரட்டைக் கோபுர தாக்குதல் ஆகியவை நடந்தன. 2018ம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த நாடாக சீனா உருவெடுக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
மேலும் 2025ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகின் பசியை போக்கும் நடவடிக்கைகள் துவங்கும், 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள் உலகையே அழிக்கும் வகையில் அணு ஆயுத போர் நடக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அவர் கணித்தவை அனைத்தும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக 2010ம் ஆண்டில் உலக தலைவர்கள் ஒபாமா, சார்கோசி, நேதன்யாஹு, புதின், கோர்டன் பிரவுன் ஆகியோரை கொல்ல முயற்சி நடக்கும் என்று அவர் கணித்தார். அந்த தலைவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications