போர் வேண்டாம்னு நினைச்சா ராணுவத்தை வாபஸ் வாங்கிடுங்க... இந்தியாவை மீண்டும் மிரட்டும் சீனா
இந்திய சீன எல்லையில் போர் வேண்டாம் என்றால், இந்தியா ராணுவ வீரர்களை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங்: சிக்கிம் பகுதியில் போர் ஆபத்து நீங்கவேண்டும் என்றால் இந்தியா உடனடியாக ராணுவ வீரர்களை வாபஸ் பெறவேண்டும் என சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளில் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது. இதில் சீன ராணுவம் திடீரென சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய ராணுவ வீரர்கள், சீனாவின் சாலை அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்த முயன்றனர். அதில் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் நடந்தது.
பின்னர் இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் சிக்கிம் பகுதியை போர் மேகம் சூழந்தது.
இந்தியா, பூடான்
இந்த நிலையில், 'இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும்' என இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. 'சீன ராணுவம் அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது, வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும்' என இந்தியா அஞ்சுகிறது. சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக பூடானும் கருத்துத் தெரிவித்தது.
இந்திய பத்திரிகையாளர்கள்
இந்த நிலையில் சீன அரசு, இந்திய பத்திரிகையாளர்களை சீனாவுக்கு அழைத்தது. பெய்ஜிங் அருகேயுள்ள ஹூரைராவு ராணுவ பயிற்சி முகாமுக்கு இந்திய பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற சீன அரசு, அங்கு அந்நாட்டு ராணுவ பலத்தை காட்டும்வகையில் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி லி கூறுகையில்," இந்திய ராணுவத்தினர்தான் சீன எல்லையை ஆக்கிரமிப்பு செய்தனர். சீன சிப்பாய்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று சொல்லுங்கள்.
தீர்வு இருக்கிறது
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு போர் வீரர். பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்காக என்னால் இயன்ற சிறப்பானதை செய்ய முயற்சிப்பேன். எங்களிடம் தீர்வு இருக்கிறது. அத்தைமட்டுமே நிறைவேற்றுவோம் என்ற உறுதியான முடிவில் இருக்கிறோம்.
வாபஸ் வாங்குங்கள்
எனவே போர் ஆபத்து நீங்க, போரைத்தவிர்க்க இந்திய படையினர் திரும்பப்பெற வேண்டும். இங்கே உங்கள் முன்பு நாங்கள் செய்து காட்டிய ராணுவ நிகழ்வுகளுக்கும், டோக்லாம் எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்று தெரிவித்தார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications