அய்யோ.. முடியா... பிடுங்கு பிடுங்கு... இங்கிலாந்துப் பெண்ணின் நூதனப் பிரச்சினை!
லண்டன்: இங்கிலாந்தின் நார்விச் பகுதியைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணுக்கு நூதன பிரச்சினை வந்துள்ளது. சிறு வயது முதலே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறார் சார்லோட் ஸ்டார்லிங் என்ற அந்தப் பெண் - அது வேறொன்றுமில்லை, உடம்பில் இருக்கும் முடியையெல்லாம் விரல்களாலேயே பிடுங்கி எறிவதுதான்.
தலை முடியைத் தவிர உடம்பில் வேறு எந்த இடத்திலும் முடியை வளர விடவே மாட்டேன் என்கிறார் இவர். முடியைப் பார்த்து விட்டால் போதும் உடனே பிடுங்கி விடுகிறார்.
சில நேரங்களில் கட்டிங் பிளேயரை வைத்தும் கூட பிடுங்கி விடுவாராம். அவரால் இதை அடக்க முடியவில்லையாம், கட்டுப்படுத்த முடியவில்லையாம். இதனால் உடம்பெல்லாம் ரத்தக் காயத்துடன் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார் இந்தப் பெண்.

டெர்மடிலோமேனியா
இந்தப் பெண்ணுக்கு வந்துள்ள பிரச்சினையின் பெயர் டெர்மடிலோமேனியா என்பதாகும். அதாவது தோளில் உள்ள முடியை பிடுங்குவதற்கான உந்துதலுக்குத்தான் இந்தப் பெயர்.

புருவத்தையும் விடவில்லை
கண் புருவத்திலிருந்து உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் இவர் முடியைப் பிடுங்கியபடியே இருக்கிறார். எந்த இடத்தில் முடியைப் பார்த்தாலும் கை சும்மா இருக்காதாம். உடனே பட்டென்று பிடுங்கி விடுவாராம்.

எந்த இடத்திலும் முடி கூடாது
கைகள், கால்கள் மார்பகங்கள், முகம் என எந்த இடத்தில் முடி வளர்ந்தாலும் அவருக்கு உடனே அலர்ஜியாகி விடுமாம். அந்த முடியைப் பிடுங்கி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாராம்.

கை மட்டுமல்ல கத்தி, கட்டிங் பிளேயர் வைத்தும்...
கைகளால் மட்டுமல்லாமல், கட்டிங் பிளேயர், கத்தி, ஊசி உள்ளிட்டவற்றையும் இவர் முடியைப் பிடுங்கப் பயன்படுத்துகிறாராம்.

கூரிய நகம் வளர்க்கிறார்
முடியைப் பிடுங்குவதற்கு தோதாக விரல் நகங்களையும் கூர்மையாக்கி வைத்துள்ளாராம் சார்லோட்.

உயிர் பயம்
இந்த கெட்ட பழக்கத்தால் தற்போது இவருக்கு உயிர் பயமும் வந்து விட்டதாம். தான் எங்கே வெறி பிடித்தவளாக மாறி விடுவோமோ என்று அஞ்சுகிறாராம். இதனால் இவரது காதலர் எப்போதும் கூடவே இருக்கிறாராம். வேலையைக் கூட அவர் விட்டு விட்டாராம்.

உடம்பெங்கும் ரத்தப் புள்ளிகள்
முடியைக் கொடூரமாக பிடுங்குவதால் இவரது உடலெங்கும் ரத்தப் புள்ளிகளாக தடித்துப் போய்க் காணப்படுகிறது. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார் சார்லோட்.

அடிமையாகி விட்டேன்
இதுகுறித்து சார்லோட் கூறுகையில், இது போதைப் பழக்கம் போல. இதற்கு நான் அடிமையாகி விட்டேன். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடியைப் பிடுங்க என்னவெல்லாமோ செய்கிறேன். உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்றும் பயப்படுகிறேன் என்றார்.

அது என்ன டெர்மடிலோமேனியா...
தோளில் வளரும் முடியைப் பிடுங்கும் உந்துதலைத்தான் டெர்மடிலோமேனியா என்கிறார்கள். முடியை என்று இல்லை, தோளைப் பிடித்து கிள்ளுவது, பிடுங்குவதும் கூட டெர்மடிலோமேனியாதான். தோளில் ரத்தம் வரும் வரை கூட சிலருக்கு அந்த உந்துதல் இருக்குமாம். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உந்துதல் ஏற்படுவதே இந்த பிரச்சினையின் முக்கிய அம்சமாகும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், உடலின் ஏதாவது ஒரு பகுதியை கிள்ளியபடியும், பிடுங்கியபடியும் இருப்பார்களாம். கிட்டத்தட்ட அரிப்பு போலத்தான் இதுவும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications