அரை மணி நேரம் கணவரை அடித்து உதைத்த அமெரிக்க "கோவை சரளா"!
புளோரிடா: தனக்குத் தெரியாமல் தனது கணவர் செக்ஸ் பொம்மையை வைத்திருந்ததை அறிந்து கோபமடைந்த அமெரிக்கப் பெண் ஒருவர், தனது கணவரை கிட்டத்தட்ட அரை மணி நேரம் சரமாரியாக அடித்து உதைத்து விட்டாராம். அடி தாங்க முடியாமல் அலறிய கணவர் போலீசாரை வரவழைத்து தப்பியுள்ளார்.
அமெரிக்க வடிவேலுவாக மாறி மனைவியிடம் அடி வாங்கிய அந்த அப்பாவிக் கணவரின் பெயர் ஜோஷுவா சின்க்ளேர். மனைவியின் பெயர் சாவோ காவோ. ஆனால் இவர் செய்த செயலால்தான் இப்போது இப்படி அடி வாங்கியுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த இந்தத் தம்பதி சமீபத்தில் புதிய வீடுக்கு மாறினர். அப்போது வீட்டில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களை எடுத்துப் பிரித்து அடுக்கி வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணவரின் பொருட்களை அப்பெண் எடுத்து வைத்தபோது, ஒரு செக்ஸ் பொம்மை சிக்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சாவோ.
இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது ஆம் அது என்னுடையதுதான் நீ இல்லாத போது பயன்படுத்துவன் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்தார் சாவோ. பிறகென்ன கணவரை அடி வெளுக்க ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் சரமாரியாக கணவரை அடித்து உதைத்துள்ளார் அவர். வெறும் கையால் மட்டுமின்றி, கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு எல்லாம் அடித்துள்ளார்.
எவ்வளவு நேரம் தான் வலிக்காதது போலவே நடிக்க முடியும். ஒருகட்டத்தில் அடி தாங்க முடியாமல் அலறிய சின்க்ளேர், ஒரு அறைக்குள் ஓடி உட்புறமாக பூட்டிக் கொண்டு தப்பியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசாரைப் பார்த்தபிறகே சற்று நிதானத்திற்கு வந்துள்ளார் சாவோ.
பின்னர் படுகாயமடைந்த சின்க்ளேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த கோபக்கார மனைவி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications