ஏமனில் கள்ளத்தொடர்பு வைத்த பெண் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்டு அடித்துக் கொலை: வீடியோ இதோ

Subscribe to Oneindia Tamil

சனா: ஏமனில் கள்ளத்தொடர்பு மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கழுத்தளவுக்கு மண்ணில் புதைத்து அடித்துக் கொன்றுள்ளனர்.

ஏமனில் உள்ள அல் முகல்லா நகரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்திருக்கிறார். மேலும் அவர் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்துவோருக்கு உதவியும் செய்து வந்துள்ளார். இது தவிர போதைப் பொருளும் உட்கொண்டுள்ளார்.

அல் முகல்லா நகர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அல் கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் ஷரியா நீதிமன்றத்தை அமைத்து வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பெண் ஷரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பு அவர் தான் கள்ளத்தொடர்பு வைத்தது, விபச்சார தொழிலில் ஈடுபட்டது, போதைப் பொருள் உட்கொண்டது ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. போதைப் பொருள் உட்கொண்டதற்காக அவருக்கு 8 கசையடியும் வழங்கப்பட்டது.

அல் முகல்லா நகரில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் மக்கள் முன்பு அந்த பெண்ணை தீவிரவாதிகள் கழுத்தளவு மண்ணில் புதைத்து கற்கள் வீசி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் உள்ளனர்.

ஷரியா சட்டப்படி திருமணமான ஆண் அல்லது பெண் வேறு ஒருவருடன் உறவு கொண்டால் கல்லால் அடித்துக் கொல்வது தான் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+